ஹோம் /நியூஸ் /காஞ்சிபுரம் /

நடிகை ரோஜா கணவருடன் குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம்..!

நடிகை ரோஜா கணவருடன் குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம்..!

நடிகை ரோஜா

நடிகை ரோஜா

ரோஜா திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள தனது குல தெய்வ கோவிலான செல்லியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kanchipuram, India

  திரைப்பட நடிகையும் ஆந்திரா மாநிலம் அமைச்சருமான  ரோஜா கணவருடன் பூர்வீக வீடான காஞ்சியில் குலதெய்வ கோவிலில் பொங்கலிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் கிராமத்தில் பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் பூர்வீக வீடு உள்ளது. ஆர்.கே.செல்வமணி அவ்வப்போது இங்கு வந்து செல்வார். இந்நிலையில் ஆர்.கே.செல்வமணியின் மனைவி நடிகை ரோஜா ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

  இதனை தொடர்ந்து ஆந்திர மாநில அரசு ரோஜாவிற்கு சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று உத்திரமேரூர் அருகே உள்ள திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள தனது குல தெய்வ கோவிலான செல்லியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டார்.

  இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கினார். இது குறித்து அவர் கூறுகையில் அமைச்சர் பதவி ஏற்றவுடன் குலதெய்வம் கோவிலுக்கு வருவதாக வேண்டி இருந்தேன் அதன் அடிப்படையில் குலதெய்வ கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தேன் சென்றார். இதனை தொடர்ந்து திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா இயக்குனர் ஆர்.கே.செல்வமணி உட்பட உறவினர்கள் பலர் உடனிருந்தனர்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Actress Roja