ஹோம் /நியூஸ் /kanchipuram /

காஞ்சிபுரம்: ரியல் எஸ்டேட் வியாபார ஆசைக் காட்டி ரூ.1 கோடி மோசடி

காஞ்சிபுரம்: ரியல் எஸ்டேட் வியாபார ஆசைக் காட்டி ரூ.1 கோடி மோசடி

போராட்டத்தில் மக்கள்

போராட்டத்தில் மக்கள்

காஞ்சிபுரத்தில் ரியல் எஸ்டேட் ஆசைகாட்டி 1 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் அருகே ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பல பேரிடம் 1 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பெற்ற நபர் பணத்தை திருப்பி தராமல் தப்பி ஓடியுள்ளார். பணத்தைக் கொடுத்து ஏமார்ந்தவர்கள் ஏமாற்றியவரின் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் திருவண்ணாமலை மாவட்டம் மாங்கால் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

போராட்டத்தில் மக்கள் 

ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்வதற்கு தேவையான முதலீடு பணத்தை சக பணியாளர்களிடமும், அவர்களின் உறவினர்களிடமிருந்தும் வாங்கியுள்ளார்.

ஒப்பந்தப் பத்திரம்

முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு தொழில் செய்து வந்துள்ளார்.

மக்கள் போராட்டம்

கடந்த சில மாதங்களாக பணத்தை தராமல் ஜனார்த்தனன் இழுத்தடித்து வந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தூசி காவல் நிலையத்தில் புகார் புகார் அளித்து உள்ளனர்‌‌. இந்நிலையில் திடீரென ஜனார்த்தனன் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

பட்டு சேலை தயாரிப்பதைப் பார்க்க வேண்டுமா.. காஞ்சி புத்தக திருவிழாவிற்கு அடிங்க ஒரு விசிட்

இதுகுறித்து அறிந்த பணம் கொடுத்து ஏமாறியவர்கள் புஞ்சை அரசன் தாங்களில் உள்ள ஜனார்த்தனன் வீட்டை முற்றுகையிட்டதின் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்: கார்த்திக், காஞ்சிபுரம்.

First published:

Tags: Kanchipuram, Local News