Home /News /kanchipuram /

மது அருந்தி வந்த தம்பி.. தட்டிக்கேட்ட அண்ணனை கத்தியால் குத்திக்கொன்ற கொடூரம் - காஞ்சிபுரத்தை அதிரவைத்த சம்பவம்

மது அருந்தி வந்த தம்பி.. தட்டிக்கேட்ட அண்ணனை கத்தியால் குத்திக்கொன்ற கொடூரம் - காஞ்சிபுரத்தை அதிரவைத்த சம்பவம்

கொலை

கொலை

காஞ்சிபுரத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் தம்பி மதுஅருந்தி வந்ததை தட்டிகேட்ட அண்ணனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Kancheepuram (Kanchipuram)
    imeகாஞ்சிபுரம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் குடித்துவிட்டு வந்ததை தட்டி கேட்ட உடன் பிறந்த கல்லூரி மாணவனை, கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த பள்ளி மாணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் சில மாதங்களாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி வருவது தொடர் கதைத் ஆகி வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை அடுத்துள்ள திருவேங்கடம் அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர், பால் பிரபு தாஸ். இவருடைய மனைவி செல்வராணி, சின்ன காஞ்சிபுரம் சிஎஸ்சி மகளிர் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கியுள்ள நிலையில், இவர்களுடைய மூத்த மகன் வின்சென்ட் ஜான் பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய இளைய மகன் பச்சையப்பன் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று  12-ம் வகுப்பு  படிக்கும் இளைய மகன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் குடித்துவிட்டு வந்ததை தட்டி கேட்ட அம்மாவை தாக்கியுள்ளார். அடிக்கடி இரண்டாவது மகன் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவருடைய அண்ணன் வின்சன் ஜான் தம்பியை தட்டி கேட்டு உள்ளார்.

    இதனால் இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது . ஒரு கட்டத்தில் மது போதையில் இருந்த தம்பி வீட்டு சமையல் அறையில் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து அண்ணன் மார்பு பகுதியில் குத்தியுள்ளார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    ALSO READ | மாடியில் ஏசி வைத்திருப்பவர்களே உஷார்..! சென்யைில் மாடி விட்டு மாடி தாவி ACயின் காப்பர் பைப் திருடும் கும்பல்..!

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவருடைய தாயார் மற்றும் தம்பியும், வின்சன் ஜானின் உடலை எடுத்துக்கொண்டு காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். கீழே தடுக்கி விழுந்ததில் எதிர்பாராத விதமாக சமையல் அறையில் இருந்த கத்தி குத்தி விட்டதாகவும் கூறி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

    மேலும் இறந்தவர் கத்திக்குத்தால் இறந்திருப்பதால், சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைஅடுத்து போலீசார் மருத்துவமனை மற்றும் வீட்டுக்கு சென்று விசாரித்த போது, மது போதையில் வந்த தம்பியை, தட்டி கேட்ட அண்ணனை கொலை செய்ததும், இதனை மறைப்பதற்கு கீழே தடுக்கி விழுந்ததாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறாரான பள்ளி மாணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Crime News, Kanchipuram, Murder

    அடுத்த செய்தி