ஹோம் /நியூஸ் /காஞ்சிபுரம் /

கலவரமாக மாறிய கல்வெட்டு பிரச்னை.. கட்டை மற்றும் கற்களால் தாக்கிக்கொண்ட அதிர்ச்சி சம்பவம்

கலவரமாக மாறிய கல்வெட்டு பிரச்னை.. கட்டை மற்றும் கற்களால் தாக்கிக்கொண்ட அதிர்ச்சி சம்பவம்

கல்வெட்டு பிரச்சனை கலவரமாக மாறியது

கல்வெட்டு பிரச்சனை கலவரமாக மாறியது

Kancheepuram | அங்கன்வாடி கட்டிடத்தில் கல்வெட்டு வைப்பது தொடர்பான பிரச்சனையில் திமுக ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kancheepuram (Kanchipuram), India

  காஞ்சிபுரம் மாவட்டம் திம்ம சமுத்திரம் கிராம ஊராட்சி மன்ற தலைவராக புல்லட் தீனா என்கின்ற தேவேந்திரன் செயல்பட்டு வருகிறார். இக்கிராம ஊராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமார் 11 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.

  இதனை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் திறந்து வைக்க இருந்ததால் அங்கன்வாடி மையத்தில் பெயர் பலகை கல்வெட்டு அமைக்கும்படி 8வது வார்டு உறுப்பினர் பிரியாவின் கணவர் அம்சநாதன் தலைவரிடம் தெரிவித்துள்ளார் .

  இதனால் அங்கன்வாடி மையத்தில் கல்வெட்டு வைக்கப்பட்டு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரால் திறக்கப்பட்டது. இதன்பின் மூன்று நாட்களுக்குப் பிறகு அம்சநாதன் இரு சக்கர வாகனத்தில் வரும்போது தேவேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் வழிமடக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி அனைவரும் அம்சநாதனை தாக்கியதில் அம்சநாதன் , காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

  இதுதொடர்பாக தேவேந்திரனின் உறவினர்கள் அனைவரும் அவர் நேற்று வீடு திரும்பியது தெரிந்து அம்சநாதனை ( 50) மீண்டும் தாக்க வீட்டுக்குள் புகுந்த நிலையில் , குடும்பத்தினர் அனைவரையும் கொலை வெறிகொண்டு தாக்கியுள்ளனர். இதனால் சண்டை முற்றி வீதிக்கு வந்து அம்சநாதனை தாக்கியவர்களை உறவினர்கள் தடுக்க முயன்றுள்ளனர்.

  இதில் அம்சநாதன் அவரது மனைவி பிரியா(37) அவரது மகன் ஹரிவரசு (25), ஹரிவரசின் மனைவி ஆர்த்தி (22), அம்சநாதனின் அக்கா தேன்மொழி(48) அம்சநாதனின் தம்பி மகன் புகழ்நிதி (11) ஆகியோர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  இச்சம்பவம் தொடர்பாக பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டு காவல்துறையினர் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் உள்ளிட்ட உறவினர்களை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

  Also see.... போலீஸ் ஸ்டேஷன் தான் போறேன்.. மனைவியை கொலை செய்துவிட்டு கத்தியுடன் சென்ற கணவன் - சிசிடிவி காட்சிகள்

  சாதாரண கல்வெட்டு விஷயம் கலவரமாகி கத்திகுத்து மற்றும் மண்டை உடைப்பு என பலத்த காயங்களுடன் முடிவடைந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சண்டையில் கட்டை மற்றும் கற்களால் தாக்கிய வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime News, DMK, Injured, Kancheepuram