ஹோம் /நியூஸ் /காஞ்சிபுரம் /

ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 ஊழியர்கள் பலி...

ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 ஊழியர்கள் பலி...

கழிவு நீர் தொட்டி

கழிவு நீர் தொட்டி

Kancheepuram | காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே நட்சத்திர விடுதியில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி, 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kancheepuram (Kanchipuram), India

  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சத்தியம் கிராண்ட் ரெசார்ட் என்கிற கேளிக்கை விடுதியில் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கச்சிபட்டு பகுதியை சேர்ந்த 4பேர் வந்தாக சொல்லப்படுகிறது.

  இதில் தனியார் தொழிற்சாலையில் தூய்மை பணி செய்யும் ரங்கநாதன், கழிவுநீர் வாகன ஓட்டுநர் நவீன்குமார், கழிவுநீர் வாகன ஓட்டுனர் திருமலை ஆகியோர் சுத்தம் செய்திட கழிவுநீர் தொட்டியில் இறங்கிய நிலையில் விஷ வாயு தாக்கி தொட்டியில் மூழ்கியுள்ளனர்.

  ஓட்டலின் பின்புறம் பணியாற்றிக் கொண்டிருந்த மூவரையும் திடீரென காணாததால், ஹோட்டல் ஊழியர்கள் தீயைணப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  உடனே அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி கழிவுநீர் தொட்டியில் இறங்கி மூவரையும் தேடினர்.

  அப்போது ரங்கநாதன் மற்றும் நவீன்குமார் சடலமாக மீட்கப்பட்டனர். திருமலையின் சடலம் தேடப்பட்டு வருகிறது. இந்நிலையில், விடுதி மேலாளர் முரளி மற்றும் காண்ட்ராக்டர் ரஜினி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  இது குறித்து மூவர்‌ மீது வழக்குப்பதிவு செய்த ஸ்ரீபெரும்புத்தூர் போலீசார் சத்தியம் கிராண்ட் ரெசாட்டின் மேலாளர் முரளி,ஒப்பத்ததாரர் ரஜினி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தலைமறைவான கேளிக்கை விடுதியின் உரிமையாளர் சத்தியமூர்த்தியை தேடி வருகின்றனர்.

  Also see... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - போலீஸ் அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட்

  உயிரிழந்த திருமலைக்கு  சில  மாதங்களுக்கு முன்பு திருமணமானதும் தெரியவந்துள்ளது.  கடந்த சில ஆண்டுகளாகவே தனியார் நிறுவன செப்டிக் டேங்க்குகளில் சுத்தம் செய்திட இறங்கி இதுவரை ஆறு பேர் உயிரிழந்திருக்கின்றனர். தொழிற்சாலை நிறைந்த இந்த பகுதியில் தொடர்ந்து இத்தகைய சம்பவம் நிகழ்வது தொடர்கதையாகி வருவது குறிப்பிடதக்கது.

  ' isDesktop="true" id="822732" youtubeid="SD77b4MQIYU" category="kanchipuram">

  இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை தொடர்பு கொண்டு கேட்ட போது, ” விபத்து ஏற்படும் வகையில் செயல்பட்டது, மாவட்ட நிர்வாகம் அனுமதி இல்லாமல் கழிவு நீரை அகற்றியது, எஸ்சி/எஸ்டி பணியாளர்களை பயன்படுத்தியது, மனிதக் கழிவுகளை மனிதர்களை அகற்ற பயன்படுத்தியது, எந்த ஒரு உபகரணங்கள் இல்லாமல் கழிவு நீர் தொட்டியில் பணியாற்றியது உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Dead, Kancheepuram, Sriperumbudur Constituency