ஹோம் /நியூஸ் /kanchipuram /

காஞ்சிபுரத்தில் தொடர் குற்றச்செயல்... குண்டர் சட்டத்தில் இருவர் கைது..

காஞ்சிபுரத்தில் தொடர் குற்றச்செயல்... குண்டர் சட்டத்தில் இருவர் கைது..

கைதானவர்கள்

கைதானவர்கள்

Kanchipuram District News : காஞ்சிபுரத்தில் தொடர் குற்றத்தில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இரண்டு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், வாலாஜாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான வையாவூர் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்(24) மற்றும் சுங்குவார்சத்திரம் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி ,திருட்டு மற்றும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான பள்ள மொளச்சூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ்(32) ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் பரிந்துரைத்தார்.

இதையும் படிங்க : “முதலில் உட்காருங்க... அப்புறம் மனு கொடுங்க‌..“ காஞ்சிபுரத்தில் புகார் அளிக்க வரும் மக்களை ஆச்சர்யப்படுத்தும் காவல்நிலையம்

அதன்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பேரையும் ஓராண்டு தடுப்பு காவலில் (GOONDAS) வைக்க இன்று உத்தரவு பிறப்பித்த நிலையில் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

காஞ்சிபுரம் செய்தியாளர் - கார்த்திக்

First published:

Tags: Kanchipuram, Local News