ஹோம் /நியூஸ் /காஞ்சிபுரம் /

காதலன் கழுத்தில் கத்தி.. காதலிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - காஞ்சிபுரத்தில் பயங்கரம்

காதலன் கழுத்தில் கத்தி.. காதலிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - காஞ்சிபுரத்தில் பயங்கரம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Crime News | காஞ்சிபுரத்தில் காதலன் கழுத்தில் வைத்து கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் அருகே சாலை ஓரம் தனிமையில் பேசி இருந்த காதலன் கழுத்தில் கத்தி வைத்து நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், காதலியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் விப்பேடு கிராம பகுதியை ஒட்டி வந்தவாசி - கீழம்பி புறவழிச்சாலை அமைந்துள்ளது. இந்தப் புறவழிச்சாலை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த சாலையை ஒட்டி பெட்ரோல் நிலையங்கள் உணவகங்கள், தனியார் பள்ளிகள்,புதிய குடியிருப்பு பிளாட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் தனியார் கல்லூரியில் படித்து வந்த காதலர்கள் நேற்று மாலை 6.30 மணி அளவில் காதலன் தனது காதலியை அழைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள பள்ளி அருகே உள்ள காலி வீட்டுமனை பகுதி சென்று அங்கு பேசிக் கொண்டிருந்த உள்ளனர்.

அப்பகுதி வழியாக வந்த மது அருந்திய நான்கு வாலிபர்கள் இவர்களைக் கண்டதும் மது போதையில் காதலனின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி அப்பெண்ணை பலவந்தமாக தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

காதலின் கழுத்தில் கத்தி வைத்ததால் செய்வதறியாது கத்தி கதறி அழுதும் கல் மனம் படைத்த மதுபோதை நபர்கள் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து  காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக  தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தியாளர்: சந்திரசேகர் ராமச்சந்திரன்

First published:

Tags: Crime News, Kanchipuram, Local News