முகப்பு /செய்தி /காஞ்சிபுரம் / பரந்தூர் விமான நிலையம் : டெண்டர் கால அவகாசம் 2வது முறையாக நீட்டிப்பு

பரந்தூர் விமான நிலையம் : டெண்டர் கால அவகாசம் 2வது முறையாக நீட்டிப்பு

பரந்தூர்

பரந்தூர்

Parandur Airport Tender | விமான நிலையத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், மேம்பாட்டு பணிகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை உள்ளிட்டவை அறிக்கை தாக்கல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையம் அமைப்பதற்கான விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்வதற்கான டெண்டர் கால அவகாசம் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமைய உள்ள விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து, விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய டெண்டர் கோரப்பட்டது.  ஏற்கனவே சில ஒப்பந்ததாரர்கள் முன்வந்துள்ள நிலையில் கூடுதலாக ஒப்பந்ததாரர்களையும் சேர்ப்பதற்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் கடந்த 6 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் தற்போது பிப்ரவரி 27 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

விமான நிலையத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், மேம்பாட்டு பணிகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை, விமான நிலைய மேம்பாடு தொடர்பாக மாஸ்டர் பிளான், திட்ட வரைபடம் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் இந்த டெண்டர் அறிவிப்பு வெளியானது.

கடந்த 15 ஆண்டுகளில் சென்னையில் விமான போக்குவரத்தின் வளர்ச்சி, 2023-24 ஆண்டு முதல் 2069-70 ஆண்டு வரை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் விமான போக்குவரத்து எந்த அளவுக்கு அதிகரிக்கும் ஆகியவை தொடர்பாகவும் அறிக்கை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Airport, Kancheepuram