முகப்பு /செய்தி /காஞ்சிபுரம் / 2 டன் ரேசன் அரிசி கடத்தல்.. அதிக விலைக்கு வடமாநில தொழிலாளர்களுக்கு விற்கவிருந்த இளைஞர் கைது

2 டன் ரேசன் அரிசி கடத்தல்.. அதிக விலைக்கு வடமாநில தொழிலாளர்களுக்கு விற்கவிருந்த இளைஞர் கைது

ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் கைதான ஜீவானந்தம்

ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் கைதான ஜீவானந்தம்

காஞ்சிபுரம் அருகே இரண்டு டன் ரேஷன் அரிசி கடத்திய இளைஞன் கைது செய்தது குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பஞ்சுபேட்டையில் உள்ள மின் நுகர்வோர் அலுவலகம் அருகே பஞ்சுப்பேட்டை பெரியதெரு ஆபிஸ் எதிரில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டாட்டா ஏஸ் நான்கு சக்கர வாகனத்தில், பிளாஸ்டிக் பைகளால் கட்டப்பட்ட, சுமார் 50 கிலோ எடை கொண்ட 41 மூட்டைகள் இருந்துள்ளன.

இதை கண்டு சந்தேகம் அடைந்த போலீசார், அதை பிரித்து பார்த்த போது, அது தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்கும் ரேசன் அரிசி என்பது தெரியவந்தது. இதை எடுத்து வந்த ஓலிமுகமதுபேட்டை பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் (வயது 23) என்பவரை விசாரித்த போது, தமிழ்நாடு அரசு பஞ்சுப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வழங்கிய ரேசன் அரிசி என்பது தெரியவந்தது.

மேலும் அந்த அரிசியை வாங்கி, அதை காஞ்சிபுரம் பகுதியில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யவிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட ஜீவானந்தத்தை கைது செய்து சிறையில் அடைத்து குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சசிகலா உத்தரவிட்டார். மேலும் அவரிடமிருந்த 2050 கிலோ (2 டன்) ரேசன் அரிசி மற்றும் டாடா ஏஸ் வாகனம் கையற்றப்பட்டது.

First published:

Tags: Kanchipuram, Ration Goods, Ration Shop, Smuggling