ஹோம் /நியூஸ் /காஞ்சிபுரம் /

தை பிறப்பு... பட்டுசேலைகள் வாங்க காஞ்சிபுரம் நோக்கி படையெடுக்கும் மக்கள்

தை பிறப்பு... பட்டுசேலைகள் வாங்க காஞ்சிபுரம் நோக்கி படையெடுக்கும் மக்கள்

பட்டு புடவை வாங்க கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்

பட்டு புடவை வாங்க கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்

Kanchipuram Silk Saree Sales | மார்கழி மாதம் சுபமுகூர்த்தங்கள் இல்லாததன் காரணமாக சற்று வெறிசோடி காணப்பட்ட நிலையில் தை மாதம் பிறந்தவுடன் கடைகளுக்கு மக்களின் கூட்டம் அதிகரிப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

தை பிறந்ததையொட்டி பட்டுசேலைகளை வாங்கிட காஞ்சிபுரத்தில்  உள்ள பட்டு கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

பட்டு நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவைகளை வாங்கிட வெளிமாநில,மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வருகை தந்து பட்டு ஜவுளி புடவைகளை வாங்கி செல்வர்கள் கடந்த மாதம் மார்கழியில் சுபமுகூர்த்தங்கள் இல்லாததன் காரணமாக சற்று வெறிசோடி காணப்பட்டது. இந்தநிலையில் சுபமுகூர்த்த மாதம் என்று அழைக்கப்படகூடிய தை மாதமானது கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பிறந்தது. இந்த மாதத்தில் சுபமுகூர்த்த நாட்கள் அதிகம் வரக்கூடிய நிலையில் மணமக்கள் வீட்டார்கள் பட்டு புடவைகளை வாங்கிட அதிகளவில் காஞ்சிபுரத்துக்கு படையெடுத்துள்ளனர்.

அந்த வகையில் பட்டு ஜவுளி கடைகள் மிகுந்த காஞ்சிபுரம் காந்தி சாலை பகுதியில் காலை முதலே அதிகளவிலானோர் வருகை தந்து பட்டு ஜவுளி புடவைகளை வாங்கிட அதிகளவில் வருகை தந்து தங்களுக்கு தேவையான பட்டுப்புடவைகளை வாங்கி செல்கின்றனர். மேலும் வரக்கூடிய வாகனங்கள் அனைத்துமே பார்க்கிங் என்று சொல்லப்படகூடிய வாகன நிறுத்தமிடங்கள் இல்லாததால் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தவிட்டு சென்று விடுகின்றனர்.

இதன் காரணமாக சாலை முழுவதுமே போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்ல கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் சாலையில் நிறுத்தப்படும் அந்த வாகனங்களினால் போக்குவரத்து சீர் செய்வதில் சிரமம் ஏற்பட்டு திணறினர்.

செய்தியாளர்: சந்திரசேகர் ( காஞ்சிபுரம்)

First published:

Tags: Kanchipuram, Local News, Silk Saree