ஹோம் /நியூஸ் /காஞ்சிபுரம் /

இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. குற்றவாளிகளை சுற்றிவளைத்த போலீஸ்.. 5 பேருக்கு கை, கால் முறிந்தது.. !

இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. குற்றவாளிகளை சுற்றிவளைத்த போலீஸ்.. 5 பேருக்கு கை, கால் முறிந்தது.. !

மாதிரி படம்

மாதிரி படம்

Kanchipuram Gang rape | போலீஸார் குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது தவறி விழுந்து 5 பேருக்கும் கை கால் முறிவு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram) | Kanchipuram

காஞ்சிபுரம் அருகே காதலன் கழுத்தில் கத்தியை காட்டி மிரட்டி காதலி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

காஞ்சிபுரம் விப்பேடு கிராம பகுதியை ஒட்டி வந்தவாசி - கீழம்பி புறவழிச்சாலை அமைந்துள்ளது. இந்தப் புறவழிச்சாலை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரியில் படித்து வந்த காதலர்கள் கடந்த வியாழன்கிழமை மாலை 6.30 மணி அளவில் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்பகுதி அந்த வழியாக மது அருந்தி வந்த மர்மநபர்கள் இவர்களைக் கண்டதும் காதலனின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி அப்பெண்ணை பலவந்தமாக தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  விமல், தென்னரசு, மணிகண்டன், சிவக்குமார் மற்றும் விக்னேஷ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். முன்னதாக போலீஸார், குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது தவறி விழுந்து 5 பேருக்கும் கை கால் முறிவு ஏற்பட்டது.

செய்தியாளர்: சந்திரசேகர் ராமச்சந்திரன்.

First published:

Tags: Crime News, Gang rape, Kanchipuram