முகப்பு /செய்தி /காஞ்சிபுரம் / உண்டியல் திறப்பு.. கொட்டிய மழையால் நனைந்த ரூபாய் நோட்டுக்கள்! பக்தர்கள் அதிர்ச்சி!

உண்டியல் திறப்பு.. கொட்டிய மழையால் நனைந்த ரூபாய் நோட்டுக்கள்! பக்தர்கள் அதிர்ச்சி!

வீணான ரூபாய் நோட்டுக்கள்

வீணான ரூபாய் நோட்டுக்கள்

Kanchipuram Hundiyal money damage | காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியதால் உண்டியல் திறக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் திறந்து காணிக்கை எண்ணும் போது பல்லாயிரக்கணக்கான ரூ.500 மற்றும் ரூ.100 ரூபாய் நோட்டுக்கள் மழை நீரில் நனைந்து சேதமடைந்தது.

பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பஞ்ச ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஏலவார் குழலி உடனுறை ஶ்ரீ ஏகாம்பரநாதர் கோவிலில் உட்பிரகாரத்தில் மொத்தம் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்கள் தனது காணிக்கையை செலுத்த தற்காலிக உண்டியல் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக வைக்கப்பட்டுள்ளது.

3 மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது ஒன்றில் நிரம்பிய உடனே இந்து சமய அறநிலைத்துறையினர் அனைத்து உண்டியலும் அதிகாரி முன்னிலையில் திறந்து பக்தர்கள் இடமிருந்து பெறப்பட்ட காணிக்கையை எண்ணப்பட்டு வருகின்றன.

மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று காலை ஏகாம்பரநாதர் கோவிலில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் முன்னிலையில் செயல் அலுவலர் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள பத்துக்கும் மேற்பட்ட உண்டியலை திறந்து எண்ண தொடங்கினர்.அதில் 3 உண்டியல்களில் கடந்த முறை பெய்த வடகிழக்கு பருவ மழையால் உண்டியலில் உள்ளே மழை நீர் சென்று தேங்கியுள்ளதால் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட காணிக்கை ரூ.500 மற்றும் ரூ.100 ரூபாய் நோட்டுகள் என பல்லாயிரம் கணக்கான ரூபாய் நோட்டுகள் முழுவதும் மழை நீரில் தேங்கி நனைந்து நாசமானது தெரியவந்தது.

பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக கோவிலுக்கு வழங்கப்படும் காணிக்கை இந்து சமய அறநிலையதுறையினரின் அலட்சியத்தால் நனைந்து பயன்படாமல் வீணானதால் சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் வேதனை அடைந்துள்ளனர்.

செய்தியாளர்: சந்திரசேகர், காஞ்சிபுரம்.

First published:

Tags: Kanchipuram, Local News, Temple