முகப்பு /செய்தி /காஞ்சிபுரம் / ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி பலியான சிறுமி... கோயில் திருவிழாவில் சோகம்!

ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி பலியான சிறுமி... கோயில் திருவிழாவில் சோகம்!

பலியான சிறுமி

பலியான சிறுமி

Kanchipuram death | கோயில் திருவிழாவிற்கு சென்ற சிறுமி சாமி ஊர்வலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஜெனரேட்டலில் தலைமுடி சிக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் அருகே கிராம கோயில் திருவிழா ஊர்வலத்தில் 13 வயது சிறுமியின் தலைமுடி ஜெனரேட்டரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சாந்தாங்கள் கிராமத்தில் நேற்று இரவு அங்காளம்மன் கோவில் கடைசி நாள் விழா நடைபெற்றது .மாட்டு வண்டியில் வைத்து சாமி ஊர்வலம் நடந்து கொண்டிருந்தபோது மாட்டு வண்டியின் பின்புறம் வண்ண விளக்குகள் எரிவதற்காக ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. சுவாமி ஊர்வலத்தின் பின்னே சென்னையை சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் லாவண்யா என்ற 13 வயது சிறுமி மாட்டு வண்டியின் பின்னே ஏரி அமர முயற்சித்த போது அங்கிருந்த ஜெனரேட்டரில் லாவண்யாவின் தலைமுடி சிக்கிக்கொண்டது.

இதில் லாவண்யா முடியோடு சேர்ந்து இழுக்கப்பட்டதில் படுகாயமடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் சிறுமியை தூக்கி சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெனரேட்டர் வாடகை விடும் உரிமையாளர் முனுசாமி என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: சந்திரசேகர், காஞ்சிபுரம்.

First published:

Tags: Crime News, Death, Kanchipuram, Local News