ஹோம் /நியூஸ் /காஞ்சிபுரம் /

மாமூல் தரலைன்னா நண்பனா இருந்தாலும் வெட்டுதான்..! பல் மருத்துவரை தாக்கிய வழக்கில் சிக்கிய குற்றவாளிகள்

மாமூல் தரலைன்னா நண்பனா இருந்தாலும் வெட்டுதான்..! பல் மருத்துவரை தாக்கிய வழக்கில் சிக்கிய குற்றவாளிகள்

கைது செய்யப்பட்ட இருவர்

கைது செய்யப்பட்ட இருவர்

KUNDRATHUR DENTAL DOCTOR | இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கத்தி, இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

குன்றத்தூர் அருகே மாமூல் தராததால் பல் டாக்டரை வெட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம் பகுதியை சேர்ந்தவர் கவுதம்( வயது 26). பல் டாக்டரான இவர் திருமுடிவாக்கம் பகுதியில் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த மாதம் இவர் மருத்துவமனையில் இருந்தபோது அங்கு நுழைந்த மர்ம நபர்கள் கவுதமை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் வெட்டுக்காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதனையடுத்து கவுதம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குன்றத்தூர் காவல்துறையினர் கவுதம் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில்  பழந்தண்டலத்தை சேர்ந்த பிரபல ரவுடி செந்தமிழ் செல்வன்(26), அவரது கூட்டாளி கருணாகரன்(என்ற) கஞ்சா கர்ணா(21) உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.

விசாரணையில்  செந்தமிழ் செல்வன், கவுதம் இருவரும் ஒரே பள்ளியில் படித்த நண்பர்கள் என்பதும் கவுதமிடம் மாமுல் கேட்டு மிரட்டியும் அவர் தர மறுத்ததால் நண்பர் என்றும் பாராமல் கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கத்தி, இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் : சோமசுந்தரம் 

First published:

Tags: Crime News, Kanchipuram, Local News, Tamil News