ஹோம் /நியூஸ் /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்

காஞ்சிபுரத்தில் இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்

இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்

இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்

Kancheepuram Cow Training Camp | பயிற்சி முகாமில் கறவை மாடுகளில் பால் கறக்கும் முறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள உழவர் பயிற்சி மையத்தில் இலவச கறவை மாடு வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உழவர் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.இம்மையத்தில் விவசாயிகளுக்கும், வேளாண் கல்லூரியில் பயிலும் மாணவியருக்கும் இலவச கறவை மாடு வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முகாமிற்கு பயிற்சி மையத்தின் தலைவர் எஸ்.ஜெயசங்கர் தலைமை வகித்தார்.பயிற்சி மைய உதவிப் பேராசிரியர் விஜயசாரதி முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமில் கறவை மாடுகளில் பால் கறக்கும் முறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள்,கறவை மாடுகளின் வகைகள் மற்றும் சிறந்த கறவை மாடுகளை தேர்வு செய்தல்,தீவனப் பராமரிப்பு முறைகள்,நோய்த்தடுப்பு முறைகள் ஆகியன குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.பயிற்சி முகாமில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

First published:

Tags: Kancheepuram, Local News