முகப்பு /செய்தி /காஞ்சிபுரம் / கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மரணம்... 53 வருட திருமண வாழ்க்கை... சாவிலும் இணைபிரியாத தம்பதி...!

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மரணம்... 53 வருட திருமண வாழ்க்கை... சாவிலும் இணைபிரியாத தம்பதி...!

உயிரிழந்த தம்பதியினர்

உயிரிழந்த தம்பதியினர்

Kancheepuram Couples Dead | கணவர் இறந்த சில நிமிடங்களிலேயே அச்செய்தி கேட்ட மனைவியும் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் பாவாபேட்டை பகுதியை கணேஷ்,  பாஜக தமிழ்நாடு மாநில அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாநில துணைத் தலைவராக இருந்து வந்தார். அத்துடன்,  பட்டு சேலை உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வருகிறார். இவரது தந்தை துரைசாமி மற்றும் தாயார் மல்லிகாவும் இவருடன்  வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அதிகாலை துரைசாமி தூங்கிக் கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது உடலை வீட்டுக்கு எடுத்து வந்தபோது அவரது மனைவி மல்லிகாவிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.

கணவர் துரைசாமி இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த மல்லிகா திடீரென மயங்கி விழுந்த நிலையில் அவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரும் மாரடைப்பால் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். கணவர் இறந்த சில நிமிடங்களிலே அச்செய்தி கேட்ட மனைவியும் இறந்தது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 53 ஆண்டுகால திருமண வாழ்வில் இணைபிரியாது இருந்த நிலையில் மரணத்திலும் தங்களை ஒருவருக்கொருவர் இணைத்துக் கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: சந்திரசேகர் ராமச்சந்திரன்

First published:

Tags: Kancheepuram, Local News