முகப்பு /செய்தி /காஞ்சிபுரம் / கடைகளை அடித்து உடைத்த காவல் ஆய்வாளர்: பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்!

கடைகளை அடித்து உடைத்த காவல் ஆய்வாளர்: பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்!

காவல் ஆய்வாளர் பரந்தாமன்

காவல் ஆய்வாளர் பரந்தாமன்

Chunguvarchatram Police Inspector Viral Video | சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் பரந்தாமன் அப்பகுதி மக்கள பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த கடைகளை அடித்து உடைத்து பொதுமக்களை அச்சுறுத்திய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவள்ளூர் செல்லும் சாலையில் மொளச்சூர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 20க்கும் மேற்பட்ட கடைகள் சாலை அருகில் உள்ள வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் பரந்தாமன் குறிப்பிட்ட இரண்டு கடையை மட்டும் குறி வைத்து கடையில் உள்ள உணவுப் பொருட்களை தூக்கி வீசி எறிவதும் கடையில் உள்ள பெண்களை தரக்குறைவாக பேசியும் ஷோகேஸ் களை உடைத்தும்

வாடிக்கையாளர்களை விரட்டி ரவுடி போல நடந்து கொண்டுள்ளார். அவர் செய்த அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில் சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் பரந்தாமன் சில ஊராட்சி மன்றத் தலைவர்களோடு இணைந்து அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் தொழில் செய்து வருவதாகவும், சுங்குவார்சத்திரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்காமல் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இயங்கும் விபச்சார விடுதிகளில் வசூல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் புகார் அளிக்க வருபவர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் மிக வேதனை தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் : சந்திரசேகர் ராமச்சந்திரன்

First published:

Tags: Kancheepuram, Local News