Home /News /kallakurichi /

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்த ஆய்வு அறிக்கையை வழங்க முடியாது... பெற்றோர் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்த ஆய்வு அறிக்கையை வழங்க முடியாது... பெற்றோர் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

மாணவியின் தாயார்

மாணவியின் தாயார்

வழக்கு விசாரணை முடியும் வரை மாணவி மரணம் தொடர்பான ஜிப்மர் குழு அறிக்கையை வழங்கமுடியாது என நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kallakkurichi (Kallakurichi), India
    கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்த ஜிப்மர் குழுவின் ஆய்வு அறிக்கையை வழங்க முடியாது என்றும் 2வது பிரேத பரிசோதனை அறிக்கையை மட்டுமே வழங்க முடியும் என்றும் விழுப்புரம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 5 பேரை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைதுசெய்துள்ளனர். கடந்த மாதம் 13-ம் தேதி பள்ளி விடுதியில் +2 மாணவி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. கலவரம் குறித்து விசாரணை நடத்திவரும் சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸார், வாட்ஸ்அப் மூலம் கலவரத்தை தூண்டியதுடன், கலவரத்திலும் பங்கேற்றதாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார், சத்தியராஜ் மற்றும் குள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர் ஆகியோரை கைதுசெய்தனர்.

    இதேபோல, பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக வீடியோ காட்சிகளின் அடிப்படையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்தையா, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சர்புதீன் ஆகியோரையும் கைதுசெய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இதனிடையே, மாணவியின் 2-வது பிரேத பரிசோதனை ஆய்வு அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் குழு நேற்று முன்தினம் தாக்கல் செய்தது. இதனையும், பிரேத பரிசோதனை வீடியோ பதிவையும் தங்களுக்கு வழங்கக் கோரி மாணவியின் பெற்றோர் தரப்பில் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. ரகசிய வாக்குமூலம் அளித்த மாணவிகள் குறித்து சிறுமியின் தாய் சந்தேகம்

    ஜிப்மர் மருத்துவ குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆய்வு அறிக்கையை மாணவி தரப்புக்கு தர நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையை மட்டுமே வழங்க  முடியும் என்றும் வழக்கு விசாரணை முடியும் வரை ஜிப்மர் அறிக்கையை வழங்கமுடியாது என நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.  மாணவி தரப்பு உயர் நீதிமன்றம் சென்று சிறப்பு அனுமதி பெற்றால் ஜிப்மர் ஆய்வரிக்கை வழங்கப்படும் எனவும் நீதிபதி புஷ்பராணி தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணை 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Court, Kallakurichi, Student

    அடுத்த செய்தி