Home /News /kallakurichi /

கனியாமூர் பள்ளியை திறப்பது குறித்து அவசர சமாதான கூட்டம்..

கனியாமூர் பள்ளியை திறப்பது குறித்து அவசர சமாதான கூட்டம்..

கோப்புப் படம்

கோப்புப் படம்

Kallakkurichi | கனியாமூர் பள்ளி திறப்பது குறித்து  கோட்டாட்சியர் தலைமையில் அவசர சமாதான கூட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kallakkurichi (Kallakurichi), India
    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர்  சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பாக 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் பள்ளி கலவரக்காரர்களால் சூறையாடப்பட்டு பள்ளி முற்றிலும் தீ வைத்து கொளுத்தபட்டு சேதமடைந்தது.

    மேலும் சேதமடைந்த பள்ளியில் சீரமைக்கும் பணிகள் நடைபெறாமல் இருப்பதால் நேரடி வகுப்புகள் இதுவரை நடைபெறவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் பெற்றோர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமாரை சந்தித்து பள்ளியை உடனடியாக திறக்க வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்தனர்.

    ஓரிரு நாட்களில் பள்ளி திறக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் நாளை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை மீண்டும் சந்திக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா தலைமையில் பெற்றோர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை அழைத்து சமாதான கூட்டம் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    Also see...அதிமுக அலுவலக உரிமை விவகாரம்.. இன்று விசாரணை..!

    இந்த கூட்டத்தில் ஒரிரு வாரங்களில் பள்ளியை திறக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சமாதான கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி , கள்ளக்குறிச்சி காவல்துணை  கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர்: எஸ்.செந்தில்குமார், கள்ளக்குறிச்சி   
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Kallakurichi, School, Students killed

    அடுத்த செய்தி