Home /News /kallakurichi /

சாலையின் குறுக்கே வந்த மான்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம் - இளைஞர் உயிரிழந்த சோகம்

சாலையின் குறுக்கே வந்த மான்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம் - இளைஞர் உயிரிழந்த சோகம்

மானின் மீது மோதிய இருசக்கர வாகனம்

மானின் மீது மோதிய இருசக்கர வாகனம்

Kallakurichi : சின்னசேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேடி வந்த மான் மீது இருசக்கர வாகனம் மோதியதில்  இளைஞர் மரணம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சின்னசேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேடி வந்த மான் மீது இருசக்கர வாகனம் மோதியதில்  மான் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கள்ளக்குறிச்சியில் உள்ள  தனியார் இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் தமிழ்ச்செல்வன். இவர் சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு தனது சொந்த ஊரான சேலத்திற்கு சென்றுவிட்டு விடுமுறை முடிந்து  பணிபுரியும் விற்பனை நிறுவனத்திற்கு இருசக்கர வாகனத்தின் மூலம் வந்துக்கொண்டிருந்தார்.

    அப்போது சின்னசேலம் அருகே உள்ள தகரை  காப்பு காட்டில் இருந்து இறை மற்றும் தண்ணீர் தேடி சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் மான் ஒன்று சாலையை கடக்க  முயன்றது. திடீரென சாலையை கடக்க முயன்ற  மான் மீது தமிழ்ச்செல்வன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் மான்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவத்தில் இளைஞர் படுகாயமடைந்தார்.

    உயிரிழந்த மான்


    இந்த விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னசேலம் போலீசார் விபத்தில் சிக்கிய தமிழ்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மோதிய இருசக்கர வாகனம்


    மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரித்தனர். இச்சம்பவம் குறித்து  சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர் : எஸ்.செந்தில்குமார்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Kallakurichi, Salem

    அடுத்த செய்தி