கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த வழக்கில், அந்தப் பள்ளியின் வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா மற்றும் கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மாணவியின் தாயார் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் இரண்டு ஆசிரியர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மாணவியை திட்டியதாக புகார் எழுந்துள்ளது.பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில், கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13-ம் தேதி, பள்ளி விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, உடலை வாங்காமல் உறவினர்கள் தொடர்ந்து 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், மாணவிக்கு ஆதரவாக போராட்டத்தில் இணைவோம் என, வாட்ஸ்-அப் குழு உருவாக்கி முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்புகள் ஒன்றிணைந்திருக்கின்றன. அதனைத் தொடர்ந்து, கனியாமூரில் உள்ள பள்ளிக்கு முன்பு நேற்று காலை 9.30 மணியளவில் சுமார் 500 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டதும், அடுத்த 15 நிமிடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் திரண்டு வந்து சென்னை - சேலம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காலை 11 மணியளவில், தடுப்பை மீறி பள்ளி வளாகத்திற்குள் நுழைத்த போராட்டக்காரர்கள், மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர். அப்போது, 300 போலீசார் மட்டுமே இருந்ததால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதை உணர்ந்த போலீசார், கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதனால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், 30-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்ததோடு பேருந்துகள் மீது டிராக்டர்களை ஏற்றி வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்கள் உள்பட10-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீப்பற்றி எரிந்தன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தொடர்ந்து பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த கணினிகள், நாற்காலிகள், ஆவணங்களுக்கு தீ வைத்து சூறையாடினர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில், விழுப்புரம் டிஐஜி பாண்டியன், கள்ளக்குறிச்சி எஸ்.பி. செல்வகுமார் உட்பட 25 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
Must Read : கலவர பூமியான கள்ளக்குறிச்சி.. நடந்தது என்ன? 10 முக்கிய தகவல்கள்.
நிலைமை எல்லைமீறி சென்றதால், கூடுதலாக 500 அதிரடிப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். போராட்டக்காரர்களை விரட்டியடித்த அதிரடிப்படை போலுசார் , பிற்பகல் 3.30 மணியளவில் பள்ளி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில், 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kallakurichi