கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணின் கண்ணீர் கதையை கேட்டு, 13 சவரன் நகையை திருடன் திருப்பி தந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதா (வயது 48). இவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோனார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் சுதா கூலி வேலை செய்து ஆடுகளை வளர்த்தும் தனது பிள்ளைகளை வளர்த்து வந்துள்ளார்.
ஒரு நாள் வழக்கம் போல் சுதா காலையில் தனது கூரை வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்குச் சென்றுள்ளார். அதன் பின்பு வீட்டிற்கு வந்த சுதா, ஆடுகளை மேய்ப்பதற்காக வீட்டிலிருந்து ஆடுகளை ஓட்டிக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். மாலை வீட்டுக்கு வந்த சுதா வீட்டைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் சுதா.
இதையும் படிக்க : சொத்து தகராறில் இரும்பு கம்பியால் அடித்து அண்ணனே தம்பியை கொன்றது அம்பலம்
இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் சுதா. தகவல் அறிந்ததையடுத்து திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த 13 அரை பவுன் நகையை வீட்டின் பின்புறமாக வந்து கூரையைப் பிரித்து உள்ளே சென்று திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.
போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், சுதா தன் பெண் பிள்ளைகள் படிப்பிற்காகவும், அவர்களின் திருமணத்திற்காகவும் கூலி வேலை செய்து ஆடுகள் வளர்த்து, அதில் வந்த பணத்தை வைத்து திருமணத்திற்காக நகை வாங்கி வைத்துள்ளதாக கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இதனை அறிந்த திருடன் அவன் திருடப்பட்ட 13 பவுண் நகையை அன்று நள்ளிரவு ஆட்டுக்கட்டகையில் நகைகளை போட்டுவிட்டு கை செலவுக்காக அரை பவுண் நகையை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர்.
அடுத்தநாள் வழக்கம்போல் காலையில் எழுந்த சுமதி ஆட்டுக்கொட்டகையில் ஆடுகளை பார்க்க சென்றபோது நகை கடந்ததை கண்டு அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தார். திருடப்பட்ட நகையை பெண் கூலி தொழிலாளின் நிலைமையைக் கண்டு அவரது ஆட்டுக் கொட்டகையில நகையை போட்டுவிட்டு கை செலவிற்காக அரை பவுன் நகை மட்டுமே எடுத்துச் சென்ற மனம் இரங்கிய திருடனைக் நினைத்து அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gold Theft, Kallakurichi, Theft