முகப்பு /செய்தி /கள்ளக்குறிச்சி / இரவு நேரங்களில் வீடு புகுந்து திருடும் திருடன்.. வெளியான சிசிடிவி காட்சிகள் - உளுந்தூர்பேட்டையில் அதிர்ச்சி!

இரவு நேரங்களில் வீடு புகுந்து திருடும் திருடன்.. வெளியான சிசிடிவி காட்சிகள் - உளுந்தூர்பேட்டையில் அதிர்ச்சி!

சிசிடிவி வீடியோ - திருடன் தவழ்ந்து செல்லும் காட்சி

சிசிடிவி வீடியோ - திருடன் தவழ்ந்து செல்லும் காட்சி

Kallakkurichi | உளுந்தூர்பேட்டையில் இரவு நேரங்களில் மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து திருடும் சிசிடி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kallakkurichi (Kallakurichi), India

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவில் வசித்து வருபவர் ரங்கநாதன்.  இவரது வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் ஒருவர் 20,000 மதிப்புள்ள இரண்டு செல்போன்கள் மற்றும் ரொக்கப் பணம் 10,000 ரூபாயை திருடி சென்றனர். இதனை அடுத்து பக்கத்து வீட்டில் வசித்து வரும் வழக்கறிஞர் ஆனந்தன் என்பவரின் வீட்டில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது அவரது வீட்டிலும் நள்ளிரவில் முட்டி போட்டு கொண்டு மர்ம நபர் ஒருவர் அங்கும் இங்குமாக திருட முயன்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அங்கு சிசிடிவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் திருடுகளை தடுப்பதற்காக நகரப் பகுதி முழுவதும் 264 சிசிடி கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் இரவு நேரங்களில் தொடர்ந்து திருட்டு நடைபெறுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

Also see... தமிழ்நாட்டில் யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை அமைக்கப்படும்!

மேலும் பொதுமக்கள் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என மாவட்ட காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 செய்தியாளர்: எஸ்.செந்தில்குமார், கள்ளக்குறிச்சி   

First published:

Tags: CCTV, Crime News, Kallakurichi, Theft, Theif