Home /News /kallakurichi /

கள்ளக்குறிச்சி பள்ளியில் இருந்து ஃபேன், பெஞ்ச், நாற்காலிகளை திருடிச் சென்ற போராட்டக்காரர்கள்..

கள்ளக்குறிச்சி பள்ளியில் இருந்து ஃபேன், பெஞ்ச், நாற்காலிகளை திருடிச் சென்ற போராட்டக்காரர்கள்..

பென்ச், நாற்காலிகளை திருடிச் சென்ற போராட்டக்காரர்கள்

பென்ச், நாற்காலிகளை திருடிச் சென்ற போராட்டக்காரர்கள்

Kallakurichi : கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த கலவரத்திற்கு மத்தியில், ஒரு கும்பல் பள்ளியில் இருந்த பெஞ்ச், ஃபேன், நாற்காலி, ஏசி, உள்ளிட்ட பொருட்களை அள்ளிச் சென்றனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில், கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13ஆம் தேதி, பள்ளி விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, உடலை வாங்காமல் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் உள்ளிட்ட சுமார் 500 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர், ஆனால், அங்கே 1000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் திரண்டனர்.

    அவர்கள் தடுப்பை மீறி பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர். அப்போது, 300 போலீசார் மட்டுமே இருந்ததால், 1000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

    நிலைமையை கட்டுப்படுத்த போலீசார், கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதனால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், 30-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்ததோடு பேருந்துகள் மீது டிராக்டர்களை ஏற்றி வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்கள் உள்பட10க்கும் மேற்பட்ட வாகனங்களை தீவைத்து எரித்தனர்.

    பள்ளிப்பேருந்துகள் தீ வைத்து எரிப்பு


    தொடர்ந்து பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த கணினிகள், நாற்காலிகள், ஆவணங்களுக்கு தீ வைத்து சூறையாடினர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில், விழுப்புரம் டிஐஜி பாண்டியன், கள்ளக்குறிச்சி எஸ்.பி. செல்வகுமார் உட்பட 25 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. நிலைமை எல்லைமீறி சென்றதால், கூடுதலாக 500 அதிரடிப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்


    போராட்டக்காரர்களை விரட்டியடித்த அதிரடிப்படை போலுசார் , பிற்பகல் பள்ளி முழுவதையும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில், சின்னசேலம் மற்றும் நைனார்பாளையம் ஆகிய இரு பகுதிகளில், 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வன்முறை வெடித்த பள்ளியில் ஏராளமான போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில், அதிமுக ஐ.டி.நிர்வாகிகள் இரண்டு பேர் உள்பட 192 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பேருந்துகளுக்கு தீ வைத்ததுடன் வாகனங்களை அடித்து நொறுக்கிய நிலையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கிராமங்களில் காவலர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    Must Read : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்.. ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்..

    இதனிடையே, கலவரத்திற்கு மத்தியில், ஒரு கும்பல் பள்ளியில் இருந்த பொருட்களை அள்ளிச் சென்றனர். அதன்படி, பெஞ்ச், ஃபேன், நாற்காலி, ஏசி, உள்ளிட்ட பல பொருட்கள் இரு சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்றனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Kallakurichi, Protest

    அடுத்த செய்தி