Home /News /kallakurichi /

டிஇஓ அலுவலகத்தில் நுழைந்து வட்டார கல்வி அலுவலரை ஆபாசமாக திட்டி தலைமை ஆசிரியர் ரகளை- கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

டிஇஓ அலுவலகத்தில் நுழைந்து வட்டார கல்வி அலுவலரை ஆபாசமாக திட்டி தலைமை ஆசிரியர் ரகளை- கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

ரகளையில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்

ரகளையில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்

Kallakurichi : உளுந்தூர்பேட்டை அருகே வட்டார கல்வி அலுவலரை ஆபாசமாக திட்டி, தொலைபேசி மற்றும் பதிவேட்டினை தூக்கி வீசிய தலைமை ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் வட்டார கல்வி அலுவலரை ஆபாசமாக திட்டி, அவர் மேஜையில் இருந்து தொலைபேசி மற்றும் பதிவேட்டினை தூக்கி வீசிய தலைமை ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டது.

    உளுந்தூர்பேட்டை அருகே மேப்புலியூர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராகப்  பணியாற்றுபவர் சேகர். இவர் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே இருப்பதாக புகார் எழுந்ததையடுத்து திருநாவலூர் வட்டார கல்வி அலுவலர் முரளி கிருஷ்ணன் அப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார்.

    அப்பொழுது தலைமை ஆசிரியர் சேகர் பள்ளியில் இல்லை எனவும், இதனால் வட்டார கல்வி அலுவலர் முரளி கிருஷ்ணன், தலைமை ஆசிரியர் சேகருக்கு 18 நாள் ஊதியத்தை நிறுத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் திருநாவலூர் வட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்று அங்கு இருந்த வட்டார கல்வி அலுவலரை  ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், அவர் மேஜையில் இருந்த தொலைபேசியை அடித்து நொறுக்கியும் அங்கிருந்த  பணிப் பதிவேட்டினை தூக்கி அவர் முகத்தில் வீசி கொலை மிரட்டல் விடுத்தார். இதனை அடுத்து அங்கிருந்த  ஆசிரியர்கள் அவரை சேகர் தடுத்ததால், அங்கிருந்து அவர் வெளியேற்றினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆபாச அர்ச்சணை செய்த தலைமை ஆசிரியர்..


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், ரகளையில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் சேகர் சில ஆண்டுகளுக்கு முன்பு குடி போதையில் தனது மனைவியை கத்தியால் குத்திய காரணத்தால் அவர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிது.

    Must Read : சர்ச்சை ஆடியோ.. மிமிக்ரி என மறுக்கும் பொன்னையன்.. அடித்து சொல்லும் நிர்வாகி - ஆட்டம் காட்டும் ஆடியோ விவகாரம்

    இந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவரிடம் புகார் தெரிவித்துள்ள வட்டார கல்வி அலுவலர் முரளி கிருஷ்ணன், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் சேகர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

    செய்தியாளர் - எஸ்.செந்தில்குமார், கள்ளக்குறிச்சி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Kallakurichi, Ulundurpet

    அடுத்த செய்தி