Home /News /kallakurichi /

கள்ளக்குறிச்சி அருகே ஆபத்தை உணராமல் பேருந்தில் தொங்கியபடியும் கூரையில் அமர்ந்தும் மாணவர்கள் பயணம்

கள்ளக்குறிச்சி அருகே ஆபத்தை உணராமல் பேருந்தில் தொங்கியபடியும் கூரையில் அமர்ந்தும் மாணவர்கள் பயணம்

பேருந்து கூரையில் பயணம்

பேருந்து கூரையில் பயணம்

பேருந்தில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணிப்பது தொடர் கதையாகி வரும் சூழலில் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kallakkurichi (Kallakurichi), India
கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவர்கள் தனியார் பேருந்தில் படிகட்டில் தொங்கியபடியும் கூரையும் அமர்ந்தும் ஆபத்தான முறையில் பயணிக்கும் புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்துகளின் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் தொங்கியபடி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள  போதிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகிறது.

இவ்வாறு ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணிப்பதை தட்டிக்கேட்டால் நடத்துநர்கள் ஓட்டுநர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு, செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே, அரசுப் போக்குவரத்து கழக பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர் தவறி விழும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

படியில் பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில் நெரிசல் மிகுந்த தடங்கலில் கூடுதல் பேருந்துகள் விடுதல், பேருந்தின் படிகளில் கதவுகள் பொருத்துதல் போன்ற நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும் போக்குவரத்துதுறையும் எடுத்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் படியில் தொங்கி பயணம் செய்யும் மாணவர்களை "படியில் பயணம் செய்யமாட்டோம்" என்று உறுதி மொழி ஏற்க செய்யும் பணியில் காவல்துறையினர், இயக்கூர்தி துறையினர், போக்குவரத்து துறையினர் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் கைக்காட்டி சேலம் மெயின் ரோட்டில்  தனியார் பேருந்தில் பயணிக்கும் மாணவர்கள் சிலர் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடியும், பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்தபடியும் ஆபத்தான முறையில் பயணிக்கும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையும், பள்ளி கல்லூரி நிர்வாகங்களும் இணைந்து இத்தகைய செயல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 
Published by:Murugesh M
First published:

Tags: Bus, School students

அடுத்த செய்தி