முகப்பு /செய்தி /கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை - தாளாளர் கைது

கள்ளக்குறிச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை - தாளாளர் கைது

கைதான தாளாளர்

கைதான தாளாளர்

இது சம்பந்தமாக மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்ட போது, பள்ளி தாளாளர் ராஜமாணிக்கம் ஆணவமாக பேசியுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kallakkurichi (Kallakurichi), India

கள்ளக்குறிச்சியில் நர்சரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பள்ளியின் உரிமையாளரும் தாளாளருமான 68 வயது நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பசுங்காயமங்கலம் என்ற சாலையில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 100 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியை ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜமாணிக்கம் (வயது 62) என்பவர் நடத்தி வருகிறார்.

இதையும் படிக்க : 8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - தாய் சாமியார் கைது

பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகியும் தாளாளருமான ராஜமாணிக்கம் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்தார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவிகளின் வாயிலாக இச்சம்பவம் மாணவிகளின் பெற்றோருக்கு தெரியவந்தது. இது சம்பந்தமாக மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்ட போது, பள்ளி தாளாளர் ராஜமாணிக்கம் ஆணவமாக பேசியுள்ளார்.

இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர் கள்ளக்குறிச்சி காவல்துறையினருக்கு போன் மூலம் புகார் அளித்துள்ளனர். புகாரினையடுத்து இன்று கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட அந்த பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைக்கு பிறகு பள்ளி நிர்வாகி ராஜமாணிக்கத்தை போலீசார் அதிரடியாக பிடித்துச் சென்றுள்ளனர். பள்ளி தாளாளர் பிடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில் படிக்கும் சின்னஞ்சிறு சிறுமிகளுக்கு 62 வயதுடைய பள்ளித்தாளாளர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாக கூறப்படும் சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: செந்தில் குமார் ( கள்ளக்குறிச்சி)

First published:

Tags: Kallakurichi, Local News, Sexual harassment