ஹோம் /நியூஸ் /கள்ளக்குறிச்சி /

கள்ளக்குறிச்சி அருகே மீண்டும் வெடித்த கலவரம்.. போலீசார் குவிப்பால் பரபரப்பு..!

கள்ளக்குறிச்சி அருகே மீண்டும் வெடித்த கலவரம்.. போலீசார் குவிப்பால் பரபரப்பு..!

சங்கராபுரம்

சங்கராபுரம்

kallakurichi : சங்கராபுரம் அருகே இரு கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் படுகாயமடைந்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kallakkurichi (Kallakurichi), India

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் மற்றும் சிவபுரம் கிராமத்தை சேர்ந்த செங்கோட்டையன் ஆகிய இருவர் கடந்த 3 மாதத்துக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இந்த விபத்தால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் நேற்று 5 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், இரண்டு கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் அந்த கிராமங்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் மூக்கனூர் மற்றும் சிவபுரம் ஆகிய இரண்டு கிராமங்களில் கலவரம் ஏற்படாமல் இருக்க 2 டிஎஸ்பிக்கள் தலைமையிலான 50க்கும்  மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கலவரம் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு தரப்பினர் மோதிகொண்ட சம்பவத்தால் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலை வருகிறது.

செய்தியாளர் : செந்தில்குமார் - கள்ளக்குறிச்சி

First published:

Tags: Crime News, Kallakurichi, Local News