ஹோம் /நியூஸ் /கள்ளக்குறிச்சி /

ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்.. ஏழ்மையை கருத்தில்கொண்டு அரசு உதவ கோரிக்கை

ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்.. ஏழ்மையை கருத்தில்கொண்டு அரசு உதவ கோரிக்கை

ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பெற்றெடுப்பு

ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பெற்றெடுப்பு

குழந்தைகள் சற்று எடை குறைவாக இருந்ததால் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை கண்காணிப்பு பிரிவில் வைக்கப்பட்டு வந்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kallakkurichi (Kallakurichi), India

  கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய், குடும்ப ஏழ்மை நிலையை கருத்தில்கொண்டு அரசு உதவ கோரிக்கை வைத்துள்ளார்.

  கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்துள்ள குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் - சுபலட்சுமி தம்பதியினர்.  இவர்களுக்கு ஏற்கனவே மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் சுபலட்சுமி மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.

  மூங்கில்துறைப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் பிரசவத்திற்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை கொண்டுவரப்பட்டு மகப்பேறு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி அன்று இரவு  அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

  தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சுபலட்சுமிக்கு  ஒரே சமயத்தில் சுகப்பிரசவமாக அடுத்தடுத்து மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் சற்று எடை குறைவாக இருந்ததால் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை கண்காணிப்பு பிரிவில் வைக்கப்பட்டு வந்தனர்.

  இதையும் படிங்க: அரிய பறவை இனங்கள் கொண்ட அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிப்பு.. தமிழக அரசு அரசாணை வெளியீடு

  தற்பொழுது தாயும் மூன்று குழந்தைகளும் நலமாக உள்ளனர். தங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளதால் அரசு தங்களுக்கு ஏதேனும் உதவ வேண்டும் என செல்வராஜ் - சுபலட்சுமி தம்பதியினர் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

  செய்தியாளர்: எஸ்.செந்தில்குமார்- கள்ளக்குறிச்சி

  Published by:Murugesh M
  First published:

  Tags: Baby, Girl Child