கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் கலவரம் நடைப்பெற்ற போது, பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்களை, போலீஸ் எச்சரிக்கையால் கிராம மக்களே கொண்டு வந்து போட்டுச் சென்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த +2 மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 17ஆம் தேதி நடைப்பெற்ற போராட்டத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது.
இந்த கலவரத்தின் போது பள்ளியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பள்ளியில் இருந்த டேபிள், சேர்கள், ஏசி இயந்திரங்கள், கணினிகள், பிரிண்டர்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் அள்ளி சென்றனர்.
இந்நிலையில், கலவரத்தின் போது தனியார் பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்களை கொண்டு வந்து போட்டுவிடுமாறும், அப்படி இல்லையென்றால் பொருட்களை கொண்டு சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தனியார் பள்ளியை சுற்றிலும் உள்ள கிராமங்களில் தண்டோரோ மூலம் போலீசார் கடந்த 2 நாட்களாக எச்சரிக்கை விடுத்து வந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதனைத் தொடர்ந்து, தனியார் பள்ளியை சுற்றிலும் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தனியார் பள்ளியில் இருந்து எடுத்து சென்ற பொருட்களை கனியாமூர் கும்பக்கோட்டாய் மாரியயம்மன் கோயில் வளாகத்தில் போட்டு வைத்துள்ளனர். இதில் 500க்கும் மேற்பட்ட டேபிள்கள், இரும்பு கம்பிகள், கிரைண்டர், சமையல் பாத்திரங்கள், குடிநீர் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களை கொண்டு வந்து போட்டு வைத்துள்ளனர்.
Must Read : சென்னை புளியந்தோப்பு பகுதியில் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு - பிரபல ரவுடிக்கு போலீசார் வலை வீச்சு
இது குறித்த தகவலின் பேரில் டேபிள், சேர்களை போட்டு வைத்துள்ள கோயில் வளாகத்தில போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர் - ஆ.குணாநிதி, விழுப்புரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kallakurichi, Private schools