Home /News /kallakurichi /

மாட்டிறைச்சி கடைகளை இறைச்சிக் கூடத்திற்கு மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மாட்டிறைச்சி கடைகளை இறைச்சிக் கூடத்திற்கு மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

 மாட்டிறைச்சி  - சாலை மறியல்

மாட்டிறைச்சி - சாலை மறியல்

மாட்டிறைச்சி கடையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் தொற்றுக்கு ஆளாகி அவதியுற்று வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chinnasalem, India
    சின்னசேலத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் இருக்கும் மாட்டிறைச்சி கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சின்னசேலம் சந்தை மேட்டில் பேரூராட்சி சார்பில் கடந்த 2016ம் ஆண்டு ரூபாய் 36 லட்சம் மதிப்பீட்டில் நவீன இறைச்சிக்கூடம் கட்டப்பட்டு செயல்படாமல் பூட்டி கிடக்கிறது. இந்நிலையில் சின்னசேலம் நயினார்பாளையம் சாலையில் உள்ள அக்ஷயா நகர், அசேபா நகர் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இங்கு மாட்டிறைச்சி கடைக்காரர்கள் குடியிருப்பு வீடுகளுக்கு அருகாமையிலும், சாலை ஓரத்திலும் பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் மாடுகளை வெட்டி மாட்டிறைச்சிகளை விற்பதாகவும் இதனால் இந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல், நாய்கள் மற்றும் காகம் உள்ளிட்ட பறவைகள் எலும்பு துண்டுகளையும், இறைச்சி துண்டுகளையும் தூக்கிச் சென்று வீடுகள் மற்றும் குடிநீர் தொட்டிகளில் போட்டு விடுவதாகவும் இதன்காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் தொற்றுக்கு ஆளாகி அவதியுற்று வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

    துர்நாற்றம் வீசுவதாக புகார்


    மேலும் இங்கு செயல்பட்டு வரும் மாட்டிறைச்சி கடைகளை இறைச்சிக் கூடத்திற்கோ அல்லது வேறு மாற்று இடத்திற்கோ மாற்றுமாறு கோரி அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பேரூராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மூன்று நான்கு முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி சின்னசேலம்  நயினார்பாளையம் சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பொதுமக்கள் சாலை மறியல்


    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சின்னசேலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    செய்தியாளர் : எஸ் .செந்தில்குமார்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Beef, Kallakurichi

    அடுத்த செய்தி