ஹோம் /நியூஸ் /கள்ளக்குறிச்சி /

கள்ளக்குறிச்சியில் வெளிவட்ட சாலை பணிகள் விரைந்து முடிக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு உறுதி

கள்ளக்குறிச்சியில் வெளிவட்ட சாலை பணிகள் விரைந்து முடிக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு உறுதி

சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

Minister E.V.Velu Speak in Assembly | தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவர் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்.எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kallakkurichi (Kallakurichi), India

கள்ளக்குறிச்சியில் வெளிவட்ட சாலை விரைந்து பணிகள் முடிக்கப்படும்  என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து தியாகதுருகம்  மற்றும் சின்னசேலம் செல்லக்கூடிய சாலைகள் தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் அந்த சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், எனவே அவற்றை சீரமைக்க மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் கள்ளக்குறிச்சி வெளிவட்டசாலை விரைந்து முடிக்கப்படும் என்றும் உளுந்தூர்பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சி வழியாக சேலம் வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுப்பாட்டில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது என விளக்கம் அளித்தார்.

இதில் எட்டு இடங்களில் சாலைகள் சீர் செய்யப்படாமல் உள்ளது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இதனை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளதாகவும் இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவர் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்.எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

First published:

Tags: Kallakurichi, Local News