Home /News /kallakurichi /

கள்ளக் காதலியின் கணவரை பீர்பாட்டிலால் குத்தி கொலை செய்து உடலை எரித்து நாடகமாடிய நபர் - பரபரப்பு வாக்குமூலம்

கள்ளக் காதலியின் கணவரை பீர்பாட்டிலால் குத்தி கொலை செய்து உடலை எரித்து நாடகமாடிய நபர் - பரபரப்பு வாக்குமூலம்

கைது செய்யப்பட்ட முருகன்

கைது செய்யப்பட்ட முருகன்

Kallakurichi : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கள்ளக் காதலியின் கணவரை கொலை செய்து ஆற்றங்கரை ஓரம் எரித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள செம்மனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் தனது கிராமத்தில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமாரி என்ற பெண்ணை திருமணம் செய்த சந்தோஷ்குமாருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.

    நேற்றைய முன்தினம் குடும்ப அட்டையில் பெயர் சேர்ப்பதற்காக உளுந்தூர்பேட்டை தாலுக்கா அலுவலகத்திற்கு சென்றவர் மீண்டும் மாலை வரை வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், சந்தோஷ் குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் எவ்வித தகவலும் இல்லாததால் வாட்ஸ்ஆப் (WhatsApp) மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் புகைப்படங்கள், செல்போன் எங்களை பதிவிட்டு தேடி வந்தனர். அத்துடன், உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

    அவர்களுடன் சந்தோஷ்குமார் குடும்பத்திற்கு பழக்கமாகி கடந்த ஒரு வருடமாக அவர்களது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த டாடா ஏசி (Tata ace) ஓட்டுநர் முருகன் என்பவனும் அங்கு தங்கி தேடி வந்துள்ளார். இந்நிலையில், ஏற்கனவே முருகன் அடிக்கடி அங்கு வருவதும் சந்தோஷ் குமார் மனைவி வசந்தகுமார் இடம் நெருக்கமாக பேசுவதையும் அறிந்த ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் இதுகுறித்து சந்தோஷ் குமாரிடமும் கூறியதாக தெரிய வருகிறது.

    இதனிடையே உளுந்தூர்பேட்டை சென்ற சந்தோஷ்குமார் வீடு திரும்பாத நிலையில், அன்று இரவே முருகன் அங்கு வந்து தங்க வேண்டிய அவசியம் என்ன என்றும், எதற்காக வந்தார் எனவும் கிராமமக்கள் சந்தேகம் அடைந்து முருகனைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். சந்தோஷ் குமாரை கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைத்துள்ளேன் எனவும், கட்டி வைத்துள்ளேன் எனவும்  மாற்றி மாற்றி கூறியுள்ளார்.

    இதனால், தீவிர சந்தேகம் அடைந்த கிராம மக்கள் அவரை அழைத்துச் சென்று உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உளுந்தூர்பேட்டை போலீசார் முருகனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாகவும் அப்போது கார் ஓட்டுனராக இருந்தபோது, மருத்துவமனைக்கு வந்த சந்தோஷ்குமார் குணமடைந்து வீடு திரும்பும் பொழுது தான் வாடகை காரில் ஏற்றி சென்று செம்மணாங்ககூரில் விட்டதாக தெரிவித்தார்.

    அப்பொழுது சந்தோஷ் குமார் மனைவியுடன் அறிமுகமாகி அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகவும் நாளடைவில் அந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறியதாகவும் சந்தோஸ்குமார் கடைக்கு பொருட்கள் வாங்கும் பொழுது, மற்றும் வெளியூர்கள் செல்லும் பொழுதும் அவ்வப்போது அங்கு வந்து தனது கள்ளகாதலியை சந்தித்து விட்டு செல்வேன் எனவும், ஊர் மக்கள் இது குறித்து சந்தேகம் அடையாமல் இருக்க சந்தோஷ்குமார் இருக்கும் பொழுதும் வசந்தகுமாரியும், முருகனும் சந்தோஷ் குமாரிடம் நட்பாக பேசி சகஜமாக இருப்பது போல் காட்டிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    கொலை செய்யப்பட்ட சந்தோஷ்குமார்


    இந்நிலையில், தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் சந்தோஷ்குமாரை தீர்த்து கட்ட வேண்டும் என தான் திட்டம் தீட்டியதாகவும், நேற்றைய முன் தினம் வசந்தகுமாரியிடம் எப்பொழுதும் போல் செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, கணவர் எங்கே என்று கேட்டபோது, அவர் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்திற்கு சென்றுள்ளார் எனவும் கூறியதை அடுத்து முருகன் உடனடியாக கள்ளக்குறிச்சியில் இருந்து தனது டாட்டா ஏசி வாகனத்தை எடுத்துக்கொண்டு உளுந்தூர்பேட்டை சென்றுள்ளார்.

    அங்கு சந்தோஷ் குமாரை சந்தித்து தான் சவாரி வந்ததாக கூறி சகஜமாக பேச்சு கொடுத்த முருகன், ஏதாவது சாப்பிட்டு போகலாம் எனவும் நகரின் புறப்பகுதிக்கு சென்று சாப்பிடலாம் எனவும் கூறி, தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் வந்ததாகவும் இங்கு தெரிந்த நபர்கள் இருப்பார்கள் கள்ளக்குறிச்சியில் உள்ள தனது வீட்டில் யாரும் இல்லை எனவும் அங்கு சென்று மதுஅருந்திவிட்டு மீண்டும் வாகனத்தில் அழைத்து வந்து வீட்டில் விடுகிறேன் எனக்கூறி அழைத்துச் சென்றுள்ளான்.

    நட்பாக பேசி நடித்து அழைத்த முருகனுடன் சென்ற சந்தோஷ்குமார் தனக்கு என்ன விபரீதம் நடக்கப் போகிறது என்பதை அறியாமல் அப்பாவியாக சென்றுள்ளார். கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள ஒரு மதுபான கடையில் ஐந்து பீர் பாட்டில்களை வாங்கியவர்கள் அங்கேயே ஆளுக்கு ஒன்றை குடித்துவிட்டு, விட்டு மீண்டும் முருகனின் வீட்டுக்குச் சென்று மது அருந்தியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஒரு கட்டத்தில் போதையின் உச்சத்திற்கு சென்ற சந்தோஷ்குமாரை அவன் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் பீர் பாட்டிலை உடைத்து கழுத்தில் குத்தி கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி சுங்க சாவடிகளை கடக்காமல் பல்வேறு கிராமங்களைச்சுற்றி கெடிலம் ஆற்றின் கரையோரம் உள்ள முட்புதரில் சந்தோஷ்குமாரின் சடலத்தை வீசி பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு சந்தோஷ்குமாரின் ஊர்மக்கள் சந்தேகம் அடையாமல் இருக்க தானும் சென்று அவர்களுடன் சேர்ந்து தேடுவதைபோல் நடித்தாகவும் கூறினான்.

    Must Read : கேரளாவில் தனியார் பேருந்து கவிழ்ந்து செவிலியர் உயிரிழப்பு..

    இதனையடுத்து போலீசார் முருகன் மீது கொலை வழக்கு பதிவு செய்து மேலும் இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா எனவவும் தீவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர் - எஸ் .செந்தில்குமார், கள்ளக்குறிச்சி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Crime News, Kallakurichi, Murder

    அடுத்த செய்தி