முகப்பு /செய்தி /கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி கலவரம்: 4 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளி.. தோரணம், பேனர் வைத்து வரவேற்பு!

கள்ளக்குறிச்சி கலவரம்: 4 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளி.. தோரணம், பேனர் வைத்து வரவேற்பு!

கனியாமூர் கலவரம்

கனியாமூர் கலவரம்

மற்ற மாணவர்களின் நலன் கருதி பள்ளி சீரமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kallakkurichi (Kallakurichi), India

கள்ளக்குறிச்சி கலவரத்தில் சேதமடைந்த சக்தி மெட்ரிக் பள்ளி 4 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே, கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கடந்த, ஜூலை, 17ல், மாணவி மரணம் தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது, கலவரம் ஏற்பட்டது.

இந்த கலவரத்தில் பள்ளி கட்டிடங்கள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி வளாகத்திற்குள் தீ வைக்கப்பட்டது. இதனால், இந்த பள்ளி காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இந்த நிலையில், 145 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. பள்ளியின் முகப்பில் தோரணங்கள் கட்டி மாணவர்கள், பெற்றோர்களை வரவேற்கும் விதமாக பேனர் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தற்போது சற்று தணிந்ததால் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

மற்ற மாணவர்களின் நலன் கருதி சீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்பட்ட பிறகு இன்று திறக்கப்பட்டது.

First published:

Tags: Kallakurichi, Local News, School