முகப்பு /செய்தி /கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி வன்முறை: தந்தை பெரியார் திராவிட கழகம், மக்கள் அதிகாரம் நிர்வாகிகள் கைது

கள்ளக்குறிச்சி வன்முறை: தந்தை பெரியார் திராவிட கழகம், மக்கள் அதிகாரம் நிர்வாகிகள் கைது

கள்ளக்குறிச்சி வன்முறை

கள்ளக்குறிச்சி வன்முறை

தந்தை பெரியார் திராவிட கழக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பிரபு, , மக்கள் அதிகாரம் அமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் கைது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே நேற்று நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பாக தந்தை பெரியார் திராவிட கழகம், மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடலூரை சேர்ந்த 17 வயது மாணவி 12-ம் வகுப்பு படிந்து வந்துள்ளார். பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தநிலையில் கடந்த 13-ம் தேதி அவரது பெற்றோரை தொடர்புகொண்ட பள்ளி நிர்வாகம் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறியதாக சொல்லப்படுகிறது.

எனினும் மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே மாணவி மரணத்துக்கு நீதி வேண்டு நேற்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. மாணவி படித்த பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி தீ வைத்தனர். மேலும் பள்ளியையும் அடித்து நொறுக்கினர்.

இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பின், மாநில பொருளாளர் கரூரை சேர்ந்த சுரேந்திரன் மற்றும் சிவா, சங்கர், தமிழரசன் ஆகிய 4 இளைஞர்கள் இன்று பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிக்க: கள்ளக்குறிச்சி வன்முறை: யூடியூப் சேனல்களின் செயலுக்கு நீதிமன்றம் கண்டனம்.. நடவடிக்கை எடுக்க உத்தரவு

இதேபோல், தந்தை பெரியார் திராவிட கழக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பிரபு, , மக்கள் அதிகாரம் அமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ராமலிங்கம் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Arrest, Girl dead, Kallakurichi