Home /News /kallakurichi /

கள்ளக்குறிச்சி வன்முறை.. பள்ளி மாணவர்களின் சான்றிதழை எரித்தவர் கைது

கள்ளக்குறிச்சி வன்முறை.. பள்ளி மாணவர்களின் சான்றிதழை எரித்தவர் கைது

கைது

கைது

பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள் தீவைத்து எரிக்கப்பட்டது தொடர்பான வீடியோவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், தீவைத்த நபர், சின்னசேலம் தாலுக்காவுக்கு உட்பட்ட வி.மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சாதிபதி என்பது தெரியவந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி சூறையாடப்பட்ட சம்பவத்தில் மாணவர்களின் சான்றிதழ்களை தீவைத்து எரித்த நபர் வீடியோ மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கனியாமூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி  கடந்த மாதம் பள்ளியில் மரணமடைந்தார். மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறிவரும் நிலையில்,  மரணம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கல் கூறிவருகிறார்.

    இந்நிலையில்,  ஜூலை 17ம் தேதி மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு ஏராளமானோர் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. பள்ளி வாகனங்கள், மாணவ, மாணவியரின் சான்றிதழ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.  இது தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டனர்.



    பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள் தீவைத்து எரிக்கப்பட்டது தொடர்பான வீடியோவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், தீவைத்த நபர், சின்னசேலம் தாலுக்காவுக்கு உட்பட்ட வி.மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சாதிபதி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தது.

    இந்நிலையில், திருப்பூரில் வைத்து லட்சாதிபதியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Kallakurichi, Police

    அடுத்த செய்தி