Home /News /kallakurichi /

கள்ளக்குறிச்சி வன்முறை: கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை.. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி வன்முறை: கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை.. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் இதுபோன்ற வன்முறையில் ஈடுபட்டதை நாங்கள் கண்டிக்கிறோம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோ பதிவுகளை வைத்து அவர்களை கைது செய்வோம் - சைலேந்திர பாபு

    கள்ளக்குறிச்சி அருகே சின்ன சேலத்தில் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13-ம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்றைய போராட்டம் வன்முறையாக மாறி தனியார் பள்ளியின் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அங்கு பிற மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சைலேந்திர பாபு,’ கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே பள்ளி மாணவி இறந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நாளைக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

    இந்நிலையில், இன்று போராட்டம் என்ற பெயரில் பள்ளிக்கூடத்தை தாக்கி உள்ளனர். 350 காவலர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் போராட்டக்காரர்களை தடுக்க முயன்றனர். அதனை மீறி பள்ளிக்கூடத்தின் மீது வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கூடுதல் காவல்துறை இயக்குநர் தாமரைக்கண்ணன் தலைமையில் போலீஸ் படை அங்கு சென்றுள்ளது. கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

    இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவிக்கு ஆதரவான போராட்டத்தில் கலவரம்... வெளி மாவட்டங்களில் இருந்து போலீஸ் விரைகிறது

    ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் இதுபோன்ற வன்முறையில் ஈடுபட்டதை நாங்கள் கண்டிக்கிறோம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோ பதிவுகளை வைத்து அவர்களை கைது செய்வோம். கலவரக்காரர்கள் உடனடியாக கலைந்து செல்ல வேண்டும். மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Kallakurichi, Protest, Violence

    அடுத்த செய்தி