முகப்பு /செய்தி /கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு மாணவியின் தாய் தான் காரணம்.. பள்ளி நிர்வாகம் குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு மாணவியின் தாய் தான் காரணம்.. பள்ளி நிர்வாகம் குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி கலவரம்- பள்ளி நிர்வாகம் விளக்கம்

கள்ளக்குறிச்சி கலவரம்- பள்ளி நிர்வாகம் விளக்கம்

மாணவர்கள் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றையும் எரித்து சேதப்படுத்தியுள்ளனர். மாணவர்களின் வாழ்க்கை வீணடிக்கப்பட்டுள்ளது. இது அனைத்திற்கும் மாணவியின் தாயார் தான் பொறுப்பேற்க வேண்டும்- பள்ளி செயலாளர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கள்ளக்குறிச்சியில் நேற்று தனியார் பள்ளி மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதோடு பள்ளி வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி கடந்த 13ம் தெதி பள்ளியின் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறி வருகின்றனர். மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டி போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறி, மாணவி படித்த தனியார் பள்ளியை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். பள்ளி வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக இதுவரை 192 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், மாணவியின் மரணம் தொடர்பாக அப்பள்ளியின் தாளாளர், முதல்வர், செயலாளர், 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே கைது செய்யப்படுவதற்கு முன்பாக பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில், மாணவி தற்கொலை செய்துகொண்ட நாளில் இருந்து பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். எதையும் மறைக்கவில்லை. மாணவியின் தாயார் எங்களை பார்க்க முயற்சித்ததாக கூறுகிறார். அப்போது நாங்கள் போலீஸ் பாதுகாப்பில் இருந்தோம். நாங்கள் எங்கேயும் போகவில்லை.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் - பள்ளி தாளாளர் உள்ளிட்ட 3 பேர் கைது

நாங்கள் போலீஸ் கஸ்டடியில் இருக்கும்போது ஏன் இப்படி வன்முறையை பரப்ப வேண்டும். பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டும். மாணவர்கள் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றையும் எரித்து சேதப்படுத்தியுள்ளனர். மாணவர்களின் வாழ்க்கை வீணடிக்கப்பட்டுள்ளது. இது அனைத்திற்கும் மாணவியின் தாயார் தான் பொறுப்பேற்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Girl dead, Kallakurichi, Violence