கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் இறந்துபோன மாணவியின் கடைசி நிமிட காட்சிகள் வெளியாகி உள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவந்த மாணவி கடந்த ஜூலை 13ம் தேதி பள்ளியின் 3வது தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. எனினும் மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறினர்.
மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு கடந்த 17ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து தனியார் பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது. பள்ளி வாகனங்கள், மாணவ- மாணவியரின் சான்றிதழ் ஆகியவற்றுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக 350 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறை சம்பவத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. இதனிடையே, இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவுபடி மாணவியின் உடல் மறு உடற்கூராய்வும் செய்யப்பட்டது.
இந்நிலையில், மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பாக, 12 ஆம் தேதி இரவு ஒன்பது முப்பது மணியளவில் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அதன்படி இரவு 9.30 மணியளவில் சிறப்பு வகுப்பு முடிந்த பிறகு, 3 ஆவது தளத்தில் உள்ள விடுதிக்கு மாணவி சென்ற காட்சி பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: Free Fire: ஆன்லைன் விளையாட்டால் இரு தரப்பிடையே மோதல்.. தேவாலயம், கடை, வீட்டை அடித்து நொறுக்கிய கும்பல்
அதனைதொடர்ந்து இரவு 10:30 மணியளவில் மாணவி மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக இரவு 8 மணியளவில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில், மாணவி சோர்வாக நடந்துவந்தது பதிவாகியுள்ளது
உங்கள் நகரத்திலிருந்து(கள்ளக்குறிச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.