Home /News /kallakurichi /

கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் செல்வி பள்ளி நிர்வாகத்தினரை சந்தித்த காட்சி வெளியீடு

கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் செல்வி பள்ளி நிர்வாகத்தினரை சந்தித்த காட்சி வெளியீடு

மாணவியின் தாய் பள்ளியில் இருக்கும் சிசிடிவி காட்சி

மாணவியின் தாய் பள்ளியில் இருக்கும் சிசிடிவி காட்சி

கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் அவரது பெற்றோரை அழைத்து பேசியது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு வழக்கில் பள்ளி நிர்வாகம் மீது மாணவியின் தாய் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை வைத்து வரும் நிலையில், மாணவி இறந்த அன்று பள்ளி நிர்வாகிகளுடன் மாணவியின் தாய் செல்வி பேசிய காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் பனிரெண்டாம் பகுப்பு வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜுலை மாதம் 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து மாணவியின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு தனியார் பள்ளி வளாகம் முன்பு கடந்த 17ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் பெரும் கலவரம் வெடித்தது.

    இதில் தனியார் பள்ளிக்குள் நுழைந்து அங்கிருந்த பள்ளி வாகனங்கள், பொருட்கள் அனைத்தும் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கி சூறையாடியத்தோடு, தீ வைத்தும் கொளுத்தப்பட்டது. மாணவி மர்ம மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருவதோடு, தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்பிரியா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    தற்போது மாணவி மரணம் தொடர்பாக வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மாணவியின் தாய் செல்வி. மாணவி மரணமடைந்த அன்று பள்ளிக்கு சென்றபோது தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. பள்ளி நிர்வாகம் தங்களை சந்திக்க மறுத்து வெளியேற்றியதாக தொடர்ச்சியாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது மாணவி உயிரிழந்த 13 ஆம் தேதி மாணவியின் தாய் செல்வி  பள்ளி நிர்வாகத்தினரை சந்தித்து பேசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

    Also Read : அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு : ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி உயர் நீதிமன்றத்தில் தகவல்

    இதில் மாணவியின் தாய், அவரின் ஆதரவாளர்கள், பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இருக்கையில் அமர்ந்து பேசுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. மாணவியின் தாய் செல்வி பள்ளி நிர்வகம் தங்களை சந்திக்கவில்லை என கூறிவந்த நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: CCTV Footage, Kallakurichi, Student Suicide

    அடுத்த செய்தி