Home /News /kallakurichi /

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

பள்ளி பேருந்து, போலீஸ் வாகனத்துக்கு தீ வைப்பு

பள்ளி பேருந்து, போலீஸ் வாகனத்துக்கு தீ வைப்பு

மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். 

கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. மாணவி படித்த பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகளை அடித்து உடைத்து தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஸ்ரீமதி, பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13-ம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

4வது நாளான இன்று அவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரை நோக்கி கற்களை வீசி அவர்கள் தாக்க தொடங்கினர். பதிலுக்கு போலீசாரும் கற்களை வீசி தாக்கியும் தடியடி நடத்தியும் அவர்களை கலைக்க முயன்றனர். இதற்கிடையே, மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: உறவினர்கள் கல்வீச்சு... போலீசார் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு

மேலும், பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ள்ளி வளாகத்தில் இருந்த 10 க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published by:Murugesh M
First published:

Tags: Kallakurichi, Protest, Violence

அடுத்த செய்தி