முகப்பு /செய்தி /கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி மாணவி உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து..

கள்ளக்குறிச்சி மாணவி உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து..

ஆம்புலன்ஸ் விபத்து

ஆம்புலன்ஸ் விபத்து

முன்னால் சென்ற காவல் வாகனம் மீது மாணவியின் உடல் எடுத்துசெல்லப்பட்ட ஆம்புலன்ஸ் மோதியது. இதில், ஆம்புலன்ஸ் வாகனம் முன்பக்கம் சேதமடைந்தது. அதே போல டி எஸ் பி வாகனமும் சேதமடைந்தது

  • Last Updated :

கனியாமூர் பள்ளி மாணவியின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், மாணவியின் உடல் எடுத்து செல்லப்பட்ட ஆம்புலன்ஸ் சிறு விபத்தில் சிக்கியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூரில் உள்ள சக்தி பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் மாணவியின் உடலுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவசர ஊர்தியில் ஏற்றப்பட்ட மாணவியின் உடல் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கொண்டு செல்லப்பட்டது.

அப்போது, முன்னால் சென்ற காவல் வாகனம் மீது மாணவியின் உடல் எடுத்துசெல்லப்பட்ட ஆம்புலன்ஸ் மோதியது. இதில், ஆம்புலன்ஸ் வாகனம் முன்பக்கம் சேதமடைந்தது. அதே போல டி எஸ் பி வாகனமும் சேதமடைந்தது. முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகீறது.

top videos

    இதை தொடர்ந்து மாணவியின் உடல் அவரது சொந்த  ஊரான பெரிய நெசலூர் கொண்டு வரப்பட்டது. மாணவியின் உடலுக்கு ஊர் மக்கள், உறவினர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்றே மாணவியின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளியாட்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதோடு போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    First published:

    Tags: Ambulance, Kallakurichi