கனியாமூர் பள்ளி மாணவியின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், மாணவியின் இறுதி ஊர்வலத்தில் வெளியூர் மக்கள் யாரும் பங்கேற்க கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கனியாமூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி கடந்த வாரம் பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து மரணமடைந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பள்ளியை முற்றையிட்டு பெற்றோர், கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கடந்த ஞாயிற்றுகிழமை வன்முறையில் முடிந்தது.
மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். மாணவியின் உடலை மறுகூராய்வு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் தாங்கள் கூறும் மருத்துவர் குழுவில் இடம்பெற வேண்டும் என்ற பெற்றோரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாணவியின் உடல் மறுகூராய்வு செய்யப்பட்டது. இதில் பெற்றோர் தரப்பில் யரும் கலந்துக்கொள்ளவில்லை. மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர், உறவினர் தரப்பில் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை. இதனையடுத்து போலீஸார் மாணவியின் வீட்டிற்கு சென்று உடலை பெற்றுக்கொள்ளுமாறு நோட்டீஸ் ஒட்டினர்.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உடலை எப்போது பெற்றுக்கொள்வீர்க என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பள்ளி மாணவியின் உடலை நாளை(இன்று) பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. , இன்று மாலைக்குள் மாணவியின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என நீதிபதி சதீஷ்குமார் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: பொன் மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
காலை 7 மணிக்குள் மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதையடுத்து, மாணவியின் சொந்த ஊரான, பெரிய நசலூர் கிராமத்தில் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று நடைபெற உள்ள மாணவியின் இறுதி சடங்கில் வெளியூர் ஆட்கள் பங்கேற்க கூடாது என, மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூரில் போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Girl dead, Kallakurichi, Police