முகப்பு /செய்தி /கள்ளக்குறிச்சி / கனியாமூர் தனியார் பள்ளி விடுதிக்கான உரிமம் பெறவில்லை - விசாரணையில் தகவல்

கனியாமூர் தனியார் பள்ளி விடுதிக்கான உரிமம் பெறவில்லை - விசாரணையில் தகவல்

கனியாமூர் பள்ளி

கனியாமூர் பள்ளி

Kalladaikurichi | கனியாமூர் தனியார் பள்ளியில் உரிய உரிமம் பெறாமல் விடுதி நடத்தப்பட்டு வந்தது மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்களின் விசாரணயில் தெரியவந்துள்ளது.

  • Last Updated :
  • Kalladaikurichi, India

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி மற்றும் முதல்வர் சிவசங்கரன், இரண்டு ஆசிரியைகள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே மாணவி மரணம் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பான விசாரணைக்காக மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி தலைமையிலான நால்வர் குழுவினர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். ஆட்சியர் ஸ்ரவன் குமார் ஜடாவத்தை நேரில் சந்தித்து, மாணவி மரணம் தொடர்பாக, ஆலோசனை நடத்தினர்.

Also see... சோதனைசாவடியில் குறட்டைவிட்டு தூக்கிய காவலர்..

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணைய தலைவர் சரஸ்வதி, ஆட்சியர் அறிவுறுத்தியும் பள்ளி நிர்வாகம் விடுதிக்கான உரிமம் பெறாமல் இருந்துள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற செய்வோம் என்றும் கூறினார்.

First published:

Tags: Kallakurichi, Private schools, Student Suicide