ஹோம் /நியூஸ் /கள்ளக்குறிச்சி /

பதவியேற்று ஓராண்டு நிறைவு... கிராமத்துக்கே விருந்து.. பெண்களுக்கு இலவச ஆட்டோ பயணம்- அசத்தும் ஊராட்சி மன்ற தலைவர்

பதவியேற்று ஓராண்டு நிறைவு... கிராமத்துக்கே விருந்து.. பெண்களுக்கு இலவச ஆட்டோ பயணம்- அசத்தும் ஊராட்சி மன்ற தலைவர்

கிராமத்துக்கே விருந்து

கிராமத்துக்கே விருந்து

பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி கிராம மக்களுக்கு அசைவ விருந்து, பெண்களுக்கு இலவச ஆட்டோ சேவை மற்றும் கிராம மக்களுக்கு 5 ஆண்டுகளுக்கு வீட்டு வரியை செலுத்தி ஆச்சரியப்பட வைத்த ஊராட்சி தலைவர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kallakkurichi (Kallakurichi), India

  கள்ளக்குறிச்சி அருகே ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவானதை ஒட்டி நாள் முழுக்க கிராம மக்களுக்கு அசைவ விருந்து உணவு வழங்கியும் அனைவரது வீடுகளுக்கும் ஐந்தாண்டுகளுக்கு வீட்டு வரி ரசீது செலுத்தியும் அருகில் உள்ள நகரங்களுக்கு பெண்கள் சென்று வர இலவச ஆட்டோக்கள் வழங்கியும்  அசத்தியுள்ளார் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர்.

  கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக சித்ராதாஸ் என்பவர் இருந்து வருகிறார். இவர் ஊராட்சி தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி அக்கிராம ஊராட்சி பொதுமக்களுக்கு அதிகாலை முதல் மாலை வரை மூன்று வேளையும் சைவ அசைவ உணவு அன்னதானம் ஊராட்சி சார்பில் வழங்கப்பட்டது.

  இந்த அன்னதான நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்ட  கிராம  பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் புதுப்பட்டு ஊராட்சி பெண்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக சங்கராபுரம், புதூர், ஆகிய  பகுதிகளுக்கு சென்று வரும் நிலையில், அவர்களுக்கு  இலவச ஆட்டோ சேவையை தொடங்கி  வைத்தார்.

  இதையும் படிங்க: ஒரு லிட்டர் பால் ரூ.32ல் இருந்து ரூ.42 ஆக உயர்த்த கோரி தொடர் பால் நிறுத்த போராட்டம் - பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

  மேலும் வருடம் தோறும் ஊராட்சிக்கு கட்ட வேண்டிய வீட்டுவரியை ஐந்தாண்டுக்கு ஆகும் முழு செலவையும் ஊராட்சி மண்ற தலைவரே ஏற்றுக் கொள்வதாகவும் ஊராட்சியில் பணம் செலுத்தி வீடு வீடாக இலவசமாக வீட்டு வரி ரசீது கொடுத்துள்ளார். முதல் பட்டதாரி பெண்களுக்கு கல்வி செலவை ஊராட்சி நிர்வாகமே ஏற்கும் எனவும் அறிவித்துள்ளார். ஊராட்சி தலைவரின் இந்த அதிரடி செயல்பாட்டுக்கு கிராம மக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

  செய்தியாளர்:  செந்தில்குமார்- கள்ளக்குறிச்சி

  Published by:Murugesh M
  First published: