ஹோம் /நியூஸ் /கள்ளக்குறிச்சி /

உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்த 6 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை.. வெளியான சிசிடிவி காட்சிகள்

உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்த 6 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை.. வெளியான சிசிடிவி காட்சிகள்

கடையின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கும் கொள்ளையன்

கடையின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கும் கொள்ளையன்

Crime News | உளுந்தூர்பேட்டையில் கடந்த 10 நாள்களில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் அரங்கேறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kallakkurichi (Kallakurichi), India

உளுந்தூர்பேட்டையில் நள்ளிரவில் அடுத்தடுத்த 6 கடைகளில் பூட்டை உடைத்து டார்ச் லைட் அடித்து  கொள்ளையன் திருடி செல்லும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகில் பிரபல வணிக வளாகத்தில் செல்போன் ஜெராக்ஸ் மற்றும் ஸ்டுடியோக்கள் உள்ளிட்ட  கடைகளில் நள்ளிரவு மர்ம நபர் ஒருவர்  கடப்பாரையை வைத்து  பூட்டை உடைத்து பின்பு கடை உள்ளே நுழைந்தார்.

பின்னர் செல்போன் டார்ச் லைட் அடித்தபடி கல்லாப்பெட்டியை தேடி கண்டுபிடித்து பெட்டியை திறந்து அதிலிருந்து பணத்தை எடுத்து பையில் வைத்துக்கொண்டார். கொள்ளையடித்து விட்டு சகஜமாக கடையின் வெளியே வந்து சுற்று முற்றும் பார்த்து அங்கிருந்து கிளம்பிச் சென்ற சிசிடிவி வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் அந்தப் பகுதியில் அதே நபர் அடுத்தடுத்த ஆறு கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை அடித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையனை தேடி வருகின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை போனதால் அப்பகுதி கடை உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: செந்தில்குமார்

First published:

Tags: Crime News, Kallakurichi, Local News