Home /News /kallakurichi /

கள்ளக்குறிச்சி மாணவியை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.. போலீஸார் தீவிர விசாரணை

கள்ளக்குறிச்சி மாணவியை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.. போலீஸார் தீவிர விசாரணை

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

மாணவி உயிரிழப்பதற்கு முன்பு பள்ளி வகுப்பறையில் அவர் நடந்து செல்லும் வீடியோ முதலில் வெளியானது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி மாடியில் இருந்து விழுந்து இறந்த சம்பவம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி கடந்த ஜூலை 13-ம் தேதி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து மரணமடைந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பள்ளியை முற்றையிட்டு பெற்றோர், கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கடந்த ஞாயிற்றுகிழமை வன்முறையில் முடிந்தது.

    இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. பெற்றோர் நீதிமன்ற படியேறிய நிலையில் மாணவிக்கு உடலுக்கு மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மகளின் மரணத்துக்கு நீதிகேட்டு பெற்றோர் உச்சநீதிமன்றத்தை நாடினார். மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுத்தனர். இதனையடுத்து நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் மாணவி உடலை பெற்றுக்கொண்டனர். இந்நிலையில் கடந்த 23-ம் தேதி மாணவி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    Also Read: கொடைக்கானல் அருவியில் போட்டோ எடுக்கும் போது தவறி விழுந்த இளைஞர் மாயம் - பதைபதைக்கும் காட்சிகள்

    இதற்கிடையில் மாணவி உயிரிழப்பதற்கு முன்பு பள்ளி வகுப்பறையில் அவர் நடந்து செல்லும் வீடியோ முதலில் வெளியானது. அதனைத் தொடர்ந்து மாணவி பள்ளி வளாகத்தில் மாடியில் ஏறிச் செல்லும் வீடியோவும் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது மாணவி இறந்ததற்கு பிறகு கடந்த 13-ஆம் தேதி   பள்ளியின் வாட்ச்மேன் மற்றும் மூன்று பெண்கள் மாணவியை தூக்கிச் செல்லும் காட்சி மற்றும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    இது முழுக்க முழுக்க பள்ளி சார்ந்த நபர்களால் வெளியிடப்பட்டனவா அல்லது பள்ளி வளாகம் சூறையாடப்பட்ட நாள் அன்று அங்கிருந்து திருடி செல்லப்பட்ட ஹார்ட் டிஸ்கில் இருந்து எடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: CCTV Footage, Kallakurichi, School student

    அடுத்த செய்தி