ஹோம் /நியூஸ் /கள்ளக்குறிச்சி /

நிர்வாகிகளை நியமிப்பதில் ஏற்பட்ட பிரச்னை...நாற்காலிகளை தூக்கி வீசி மோதிகொண்ட பாஜகவினர்.

நிர்வாகிகளை நியமிப்பதில் ஏற்பட்ட பிரச்னை...நாற்காலிகளை தூக்கி வீசி மோதிகொண்ட பாஜகவினர்.

பாஜகவினர் வாக்குவாதம்

பாஜகவினர் வாக்குவாதம்

நிர்வாகிகள் நியமிக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் மாவட்ட தலைவர் ஆதரவாளர்களுக்கும், புதிய மாவட்டத் தலைவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kallakkurichi (Kallakurichi), India

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் நாற்காலிகளை வீசி தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டம், சங்கராபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டது தொடர்பாக, முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுந்தரத்தின் ஆதரவாளர்களுக்கும், புதிய மாவட்ட தலைவர் அருள் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

முன்னாள் தலைவரின் ஆதரவாளர்கள் வகித்த பொறுப்புகளை, எந்த வித காரணமும் கூறாமல், புதிய தலைவரின் ஆதரவாளர்களுக்கு கொடுத்துவிட்டதாக உருவான வாக்குவாதம், திடீரென கைகலப்பாக மாறியது. இதையடுத்து, அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி மோதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: BJP, BJP cadre, Kallakurichi