கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சேலம் நெடுஞ்சாலையில் சைவ உணவகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த உணவகத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு மூன்று பேர் உணவருந்த வந்துள்ளனர். விதவிதமான உணவுகளை ஆர்டர் செய்த மூவரும் ரசித்து, ருசித்து சாப்பிட்டுள்ளனர்.
நிதானமாக சாப்பிட்டு முடித்த மூவரிடமும் உணவக ஊழியர் சாப்பிட்டதற்கான பில்லை கொடுத்துள்ளார். பில்லை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மூவரும் நாங்கள் யார் தெரியுமா ? இந்து முன்னணி நிர்வாகிகள், நீங்கள் கொடுத்த எந்ந உணவும் நன்றாகவே இல்லை அனைத்தும் கெட்டுப்போன பழைய உணவுகள் என்று கூறியுள்ளனர்.
மேலும் சாப்பிட்ட சாப்பாட்டிற்கு பணத்தை கொடுக்க முடியாது என்று மறுத்தவர்கள் உங்கள் உணவகத்தை சோதனையிட வேண்டும் என்று கூறி உணவகத்தின் சமையல் அறைகளில் புகுந்து பொருட்களை தூக்கிவிசியுள்ளனர்.
இதையடுத்து உணவக ஊழியர் கொடுத்த புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர் பேட்டை போலீசார் கலவரத்தில் ஈடுப்பட்ட மூவரையும் பிடித்தனர்.
விசாரணையில் பிடிபட்டவர்கள் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் அஜய் மற்றும் மோகன் என்று தெரிவந்துள்ளது. மூவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்: எஸ்.செந்தில்குமார், கள்ளக்குறிச்சி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Hindu Munnani, Hotel, Kallakurichi