Home /News /kallakurichi /

சுடுகாட்டில் மர்ம குழி.. மகள் வாங்கிய கடனுக்காக கொல்லப்பட்ட பெண் - கள்ளக்குறிச்சியை அதிர வைத்த சம்பவம்

சுடுகாட்டில் மர்ம குழி.. மகள் வாங்கிய கடனுக்காக கொல்லப்பட்ட பெண் - கள்ளக்குறிச்சியை அதிர வைத்த சம்பவம்

தந்தை-மகன் கைது

தந்தை-மகன் கைது

Kallakurichi : சங்கராபுரம் அருகே மகள் வாங்கிய பணத்திற்காக தாயை கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து புதைத்த தந்தை மற்றும் மகன் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த புதூர் சுடுகாடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் மூடப்பட்டிருந்த குழியை பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து அந்த மர்ம குழியை தோண்டி பார்த்தபோது, அதில் சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் இருந்தது தெரியவந்தது.

    அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியிலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அந்தப் பெண்ணின் உடல் மீண்டும் புதைக்கப்பட்டது. தொடர்ந்து அந்தப் பெண் யார் அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், கொலை செய்யப்பட்டவர் விரியூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மனைவி ஆண்டாள் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மற்றும் அவரது மகன் விக்னேஷ் பொறியியல் பட்டதாரி இவர்கள் இருவரும் ஆண்டாள் கொலை வழக்கு தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தனர்.

    அவர்களை போலீசாரிடம் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்தார். இதனை அடுத்து போலீசாரிடம் அவர்கள் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில், ஆண்டாளின் மகள் தனலட்சுமி மொத்த அரிசி வியாபாரம் செய்து வருவதாகவும் அதில் அவரிடம் அரிசி வாங்கி வியாபாரம் செய்வதற்காக 15 லட்சத்தை வீராசாமி கொடுத்துள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆன பின்பும் தனலட்சுமி அரிசி வாங்கி கொடுக்கவில்லை இதனை அடுத்து தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு தனலட்சுமியிடம் வீராசாமி கேட்டுள்ளார்.

    ஆனால் அவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனலட்சுமியை தேடி அவரது வீட்டிற்கு வீராசாமியின் அவரது மகன் விக்னேஷ் சென்றனர். ஆனால் அங்கு தனலட்சுமி இல்லை இதனையடுத்து அங்கிருந்த ஆண்டாளிடம் உனது மகள் எங்களுடைய பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார் எனவே நீ எங்களது வீட்டிற்கு வா அப்படி வந்தால் உன்னை தேடி உனது மகள் எனது வீட்டிற்கு வருவாள் என கூறி ஆண்டாளை வீராசாமி தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இருப்பினும் ஆண்டாளை தேடி தனலட்சுமி வராததால் ஆத்திரமடைந்த வீராசாமி மற்றும் விக்னேஷ் இருவரும் சேர்ந்து ஆண்டாளை தாக்கியதோடு சேலையால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். பின்னர் கொலையை மறைக்க ஆண்டாளின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி இரு சக்கர வாகனத்தில் கொண்டு வந்து புதூர் சுடுகாட்டில் குழிதோண்டி புதைத்துவிட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

    கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்ததால், எப்படியும் காவல்துறையினரிடம் சிக்கிக் கொள்வோம் என்ற அச்சத்தில் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைவதாக அவர்கள் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    Must Read : இந்தியாவில் மீண்டும் கலவரத்தை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

    இதனை அடுத்து தந்தை மற்றும் மகன் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மகள் வாங்கிய பணத்திற்காக அவரது தாயை கடத்திச் சென்று தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் - எஸ்.செந்தில்குமார், கள்ளக்குறிச்சி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Crime News, Kallakurichi, Kidnapping Case, Murder

    அடுத்த செய்தி